தமிழ் உலகம்

தினம் ஒரு குறள்

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்.

அறன்வலியுறுத்தல் (குறள் எண்: 33)

பொருளுரை:

          செய்யக்கூடிய வகையால், எக்காரணத்தாலும் விடாமல் செல்லுமிடமெல்லாம் அறச்செயலைப் போற்றிச் செய்ய வேண்டும்.

உறுப்பினர் பகுதி

பெயர் - மேலோட்டமாகப் பார்த்தால் அது வெறும் ஒரு நபரை குறிக்கும் சொல். ஆழ்ந்து பார்த்தால், அது ஒருவரின் இனம், மொழி, கலாச்சாரப் பெருமிதம்.

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த மொழியான தமிழ்மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட நமக்கு எப்படி அது ஒரு நபரைக் குறிக்கும் வெற்றுச் சொல்லாக இருக்க முடியும்? தோற்றம் காண முடியாத தொன்மையும், உலகின் வேறு எந்த மொழியிலும் இல்லாத இலக்கிய வளமும் வனப்பும், முதிர்ந்த கலாச்சாரமும் கொண்ட நமது அடையாளத்தை குழந்தைகளுக்கு தூய தமிழில் பெயரிடுவதன் மூலம் நாம் நமது தொன்மையின் மீது கொண்டுள்ள மதிப்பையும் பெருமிதத்தையும் உலகிற்கு உணர்த்தவும் அடுத்த தலைமுறைக்குக் கடத்தவும் முடியும்.

வேற்று மொழிப் பெயர்களைச் சூடுவதன், சூட்டுவதன் மூலம் நாம் நமது தனித்தன்மை கொண்ட அடையாளத்தைத் தொலைத்து, முகவரியற்றுத் திரியும் வகையினர் ஆகிவிடுவோம்.

பிற மொழியினர் எவரும் தங்கள் பிள்ளைகளுக்கு புதுமை என்ற பெயரிலோ, தங்களை வேறுபடுத்திக் காட்டும் பொருட்டோ தமிழ்ப் பெயர்களைச் சூட்டுவதில்லை. எது தமிழ்ப் பெயர் என்கிற தெளிவு இல்லாமலும், உச்சரிக்கக் கடினமான, பொருள் விளங்காத பிற மொழிபெயர்களைச் சூட்டுவது புதுமை என்னும் தவறான புரிதலிலும் சிக்கிச் சிதறியவர்கள் நம்மில் பலர்.

குழந்தைகளுக்குத் தூய தமிழில் பெயர் சூட்டும் எண்ணம் மிகுந்து வருவது மகிழ்ச்சியான செய்தி. அதனால், தூய தமிழ்ப் பெயர்களைத் திரட்டவும் உருவாக்கவும் முனைகிறோம். நீங்கள் அறிந்த தமிழ்ப் பெயர்களை எங்களுக்கு எழுதுங்கள்.

தூய தமிழ்ப் பெயர்கள் எங்கும் ஒலிக்கும்படி நம் குழந்தைகளுக்குச் சூட்டி, அழைத்து மகிழ்வோம்.

 
தமிழ் பெயர் English Name விளக்கம் விருப்பம்
அகவன் Akavan

பாடகன்

 5
அகிலன் Akilan  1
அகில் Akil

அகில் - ஒரு மணம் மிக்க மரம்

 0
அண்டிரன் Andiran

கடையெழு வள்ளல்களுள் ஒருவனான ஆய் அண்டிரன்

 2
அதிகன் Athikan

ஓர் சங்கத்தமிழ்ப் பெயர்

 0
அதியன் Athiyan  1
அதியமான் Athiyaman

கடையெழு வள்ளல்களுள் ஒருவன் - அதியமான் நெடுமான் அஞ்சி

 0
அந்துவன் Anthuvan  0
அன்பரசன் Anbarasan  1
அன்பழகன் Anbalagan/ Anbazhagan

அன்பும் அழகும் மிக்கவன்

 0
அன்பு/ அன்பன் Anbu/ Anban  1
அன்புச்செல்வன் Anbuselvan

அன்பு மிக்க ஆண்மகன்/  அன்பின் செல்வன்

 0
அமர் Amar  0
அமல் / அமலன் Amal/ Amalan

செழிப்பு

 1
அரசு Arasu  1
அருமன் Aruman  1
அருள் Arul  1
அருள்மொழி Arulmozhi  1
அறவாழி Aravaazhi

அறவாழி (அற + ஆழி): அறக்கடல் (ஆழி - கடல்)

 1
அறிவுமதி Arivumathi  1
அழகன் Azhagan

அழகு மிக்கவன்

 0
அழிசி Azhisi  1
அவியன் Aviyan  0
ஆதன் Aathan  1
ஆதவன் Aathavan  1
ஆர்வலன் Aarvalan

செய்யும் செயலில் ஈடுபாடு கொண்டவன்

 1
ஆழகினியன் Alaginiyan / Azhaginiyan

அழகும் இனிமையும் மிக்கவன்

 0
இனியன் Iniyan

இனிமையானவன்

 1
இன்முகன் Inmukan  0
இன்மொழி / இன்மொழியன் Inmozhi / Inmozhiyan  0
இலக்கியன் Ilakkiyan

இலக்கியம் படைப்பவன்/விரும்புபவன்

 1
இளங்கீரன் Ilankeeran  0
இளங்கோ / இளங்கோவன் Ilango / Ilangovan  0
இளஞ்சென்னி Ilanchenni  0
இளன் Ilan

இளமை நிறைந்தவன்

 1
இளமாறன் Ilamaaran  0
இளம்பிறையன் Ilampiraiyan  2
இளம்வழுதி Ilamvazhuthi  1
இளவரசு / இளவரசன் Ilavarasu / Ilavarasan  0
இளவேந்தன் Ilaventhan  0
உசிதன் Usithan  1
உதயன் Uthayan  1
உதியன் Uthiyan  1
கதிரவன் Kathiravan  2
கதிர் Kathir  2
கதிர்ச்செல்வன் Kathirselvan  2
கந்தன் Kanthan  1
கபிலன் Kapilan  1
கயிலன் Kayilan  1
கலின் Kalin  1
கலைச்செல்வன் Kalaiselvan  0
கலையரசன் Kalaiyarasan  0
கவின் Kavin  1
கீரன் Keeran  1
செல்வன் Selvan  1
செழியன் Chezhian  1
நளின் Nalin  1
நவின் Navin  2
நவிர்/ நவிரன் Navir/ Naviran  2
நவில்/ நவிலன் Navil/ Navilan  2
நிகரன் Nikaran  1
நிவன் Nivan  2
நெடுஞ்செழியன் Nedunchezhian  1
நெதிரன் Nethiran  1
பரிதி Parithi

கதிரவன்

 1
பாண்டியன் Pandiyan

மூவேந்தர்களுள் ஒருவரான பாண்டிய மன்னர்கள்; பாண்டிய மன்னன்

 1
பாரி Pari  1
புகழ் Pukazh

புகழ் மிக்கவன்; மற்றவர் புகழும்படி செயலாற்றுபவன்

 1
பொற்செழியன் Porchezhiyan  2
மகிழ்நன் Makizhnan  0
மணிமாறன் Manimaaran  0
மதிவாணன் Mathivaanan  0
மாறன் Maran  1
முகில் / முகிலன் Mukil / Mukilan  1
வளர்பிறையன் Valarpiraiyan  0
வளவன் Valavan  1
வள்ளுவன் Valluvan  0
வழுதி Vazhuthi  1
வினயன் Vinayan  0
வியன் Viyan  3
வீயன் Veeyan  1
வேந்தன் Venthan/ Vendhan  1
தமிழ் பெயர் English Name விளக்கம் விருப்பம்
அகிலா Akila

நறுமணம் மிக்கவள் (அகில் - ஒரு நறுமணம் மிக்க மரம்)

 1
அகை Akai

மலர்

 2
அங்கை Angai

அழகிய கைகள் கொண்டவள் [அங்கை (அம் + கை): அம் - அழகிய]

 1
அச்சிரா Achira

குளிர்ச்சியானவள் (அச்சிரம் - முன்பனிக்காலம்)

 2
அணிமலர் Animalar

அழகிய மலர் போன்றவள் (அணி -அழகு)

 1
அதரா Athera

வழியாய் விளங்குபவள் (அதர் - வழி)

 2
அதிரா Athira

அதிரல் மலர் (மல்லிகை) - Jasmine

 1
அனிச்சா Anicha  1
அமரா Amara  1
அமலா Amala  1
அமலி Amali  0
அரண்யா Aranya  1
அல்லி Alli  0
அவினி Avini  0
அவிரா Avira  0
ஆரலி Aarali  0
ஆர்த்தி Aarthi  1
இனியா Iniya  2
இன்பா Inba  1
இளமதி Ilamathi  0
இழையினி Izhaiyini  1
உசிதா Usitha  0
எழிலரசி Ezhilarasi  0
ஓவியா Oviya  0
கனலி Kanali  1
கனிமொழி Kanimozhi  1
கமனி Kamani  1
கமழி Kamazhi  2
கயல் Kayal  1
கயல்விழி Kayalvizhi  1
கயில் Kayil  1
கலை Kalai  1
கலைச்செல்வி Kalaiselvi  1
கலைமகள் Kalaimagal  1
கலையரசி Kalaiyarasi  1
கவினி Kavini  3
மணிமலர் Manimalar  0
மணிமொழி Manimozhi  0
மலர் Malar  0
மலர்கொடி Malarkodi  0
மலர்மகள் Malarmakal  1
மலர்விழி Malarvizhi  2
மென்மொழி Menmozhi  1
யாழினி Yazhini  1
வளர்மதி Valarmathi  1
வான்மகள் Vaanmakal  0
வெண்பா Venba  1
வெண்மணி Venmani  1
வெண்மதி Venmathi  1
வேல்விழி Velvizhi  0
வைனி Vaini  0
பெருமிதம்