தமிழ் உலகம்

தினம் ஒரு குறள்

முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
வஞ்சரை அஞ்சப் படும்.

கூடாநட்பு (குறள் எண்: 824)

பொருளுரை:
முகத்தால் இனிமையாகச் சிரித்துப் பழகி அகத்தில் தீமை கொண்டுள்ள வஞ்சகருடன் நட்புக் கொள்வதற்கு அஞ்சவேண்டும்.
உறுப்பினர் பகுதி

பெயர் - மேலோட்டமாகப் பார்த்தால் அது வெறும் ஒரு நபரை குறிக்கும் சொல். ஆழ்ந்து பார்த்தால், அது ஒருவரின் இனம், மொழி, கலாச்சாரப் பெருமிதம்.

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த மொழியான தமிழ்மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட நமக்கு எப்படி அது ஒரு நபரைக் குறிக்கும் வெற்றுச் சொல்லாக இருக்க முடியும்? தோற்றம் காண முடியாத தொன்மையும், உலகின் வேறு எந்த மொழியிலும் இல்லாத இலக்கிய வளமும் வனப்பும், முதிர்ந்த கலாச்சாரமும் கொண்ட நமது அடையாளத்தை குழந்தைகளுக்கு தூய தமிழில் பெயரிடுவதன் மூலம் நாம் நமது தொன்மையின் மீது கொண்டுள்ள மதிப்பையும் பெருமிதத்தையும் உலகிற்கு உணர்த்தவும் அடுத்த தலைமுறைக்குக் கடத்தவும் முடியும்.

வேற்று மொழிப் பெயர்களைச் சூடுவதன், சூட்டுவதன் மூலம் நாம் நமது தனித்தன்மை கொண்ட அடையாளத்தைத் தொலைத்து, முகவரியற்றுத் திரியும் வகையினர் ஆகிவிடுவோம்.

பிற மொழியினர் எவரும் தங்கள் பிள்ளைகளுக்கு புதுமை என்ற பெயரிலோ, தங்களை வேறுபடுத்திக் காட்டும் பொருட்டோ தமிழ்ப் பெயர்களைச் சூட்டுவதில்லை. எது தமிழ்ப் பெயர் என்கிற தெளிவு இல்லாமலும், உச்சரிக்கக் கடினமான, பொருள் விளங்காத பிற மொழிபெயர்களைச் சூட்டுவது புதுமை என்னும் தவறான புரிதலிலும் சிக்கிச் சிதறியவர்கள் நம்மில் பலர்.

குழந்தைகளுக்குத் தூய தமிழில் பெயர் சூட்டும் எண்ணம் மிகுந்து வருவது மகிழ்ச்சியான செய்தி. அதனால், தூய தமிழ்ப் பெயர்களைத் திரட்டவும் உருவாக்கவும் முனைகிறோம். நீங்கள் அறிந்த தமிழ்ப் பெயர்களை எங்களுக்கு எழுதுங்கள்.

தூய தமிழ்ப் பெயர்கள் எங்கும் ஒலிக்கும்படி நம் குழந்தைகளுக்குச் சூட்டி, அழைத்து மகிழ்வோம்.

 
தமிழ் பெயர் English Name விளக்கம் விருப்பம்
அகவன் Akavan

பாடகன்

 8
அகிலன் Akilan  2
அகில் Akil

அகில் - ஒரு மணம் மிக்க மரம்

 1
அண்டிரன் Andiran

கடையெழு வள்ளல்களுள் ஒருவனான ஆய் அண்டிரன்

 2
அதிகன் Athikan

ஓர் சங்கத்தமிழ்ப் பெயர்

 1
அதியன் Athiyan  2
அதியமான் Athiyaman

கடையெழு வள்ளல்களுள் ஒருவன் - அதியமான் நெடுமான் அஞ்சி

 1
அந்துவன் Anthuvan  0
அன்பரசன் Anbarasan  2
அன்பழகன் Anbalagan/ Anbazhagan

அன்பும் அழகும் மிக்கவன்

 0
அன்பு/ அன்பன் Anbu/ Anban  1
அன்புச்செல்வன் Anbuselvan

அன்பு மிக்க ஆண்மகன்/  அன்பின் செல்வன்

 0
அமர் Amar  0
அமல் / அமலன் Amal/ Amalan

அமலை - செழிப்பு

 1
அரசு Arasu  1
அருமன் Aruman  1
அருள் Arul  1
அருள்மொழி Arulmozhi  1
அறவாழி Aravaazhi

அறவாழி (அற + ஆழி): அறக்கடல் (ஆழி - கடல்)

 1
அறிவுமதி Arivumathi  1
அழகன் Azhagan

அழகு மிக்கவன்

 0
அழகினியன் Alaginiyan / Azhaginiyan

அழகும் இனிமையும் மிக்கவன்

 1
அழிசி Azhisi  1
அவியன் Aviyan  0
ஆதன் Aathan  1
ஆதவன் Aathavan  1
ஆர்வலன் Aarvalan

செய்யும் செயலில் ஈடுபாடு கொண்டவன்

 2
இனியன் Iniyan

இனிமையானவன்

 3
இன்முகன் Inmukan  0
இன்மொழி / இன்மொழியன் Inmozhi / Inmozhiyan  0
இலக்கியன் Ilakkiyan

இலக்கியம் படைப்பவன்/விரும்புபவன்

 1
இளங்கீரன் Ilankeeran  0
இளங்கோ / இளங்கோவன் Ilango / Ilangovan  0
இளஞ்சென்னி Ilanchenni  0
இளன் Ilan

இளமை நிறைந்தவன்

 1
இளமாறன் Ilamaaran  1
இளம்பிறையன் Ilampiraiyan  3
இளம்வழுதி Ilamvazhuthi

பாண்டிய மன்னன் (வழுதி - பாண்டிய மன்னர்களைக் குறிக்கும் பெயர்)

 1
இளவரசு / இளவரசன் Ilavarasu / Ilavarasan  0
இளவேந்தன் Ilaventhan  0
உசிதன் Usithan  1
உதயன் Uthayan  1
உதியன் Uthiyan  1
எழிலன் Ezhilan

அழகன் (எழில் - அழகு)

 0
எவ்வி Evvi

ஒரு குறுநில மன்னன்

 1
ஓரி Ori

கடையெழு வள்ளல்களுள் ஒருவனான வல்வில் ஓரி

 1
கதிரவன் Kathiravan  2
கதிர் Kathir  2
கதிர்ச்செல்வன் Kathirselvan  2
கந்தன் Kanthan  1
கபிலன் Kapilan  1
கயிலன் Kayilan  1
கலின் Kalin  1
கலைச்செல்வன் Kalaiselvan  0
கலையரசன் Kalaiyarasan  0
கவின் Kavin  2
கீரன் Keeran  1
செங்குட்டுவன் Senguttuvan

இமயம் வென்ற சேரன் செங்குட்டுவன் 

 0
செந்தில் Senthil

செந்தில் 

 0
செம்பியன் Chempiyan

ஒரு மன்னனின் பெயர்

 0
செல்வன் Selvan  1
செழியன் Chezhian  2
சேந்தன் Chenthan

சேந்தன்

 0
சேரன் Cheran

சேரன்

 0
சோழன் Chozhan

சோழன்

 0
தமிழ்செல்வன் Thamizhselvan/ Tamilselvan

தமிழின் மகன்

 0
தமிழ்மகன் Thamizhmagan/ Tamilmagan

தமிழின் மகன்

 0
நன்னன் Nannan

ஒரு குறுநில மன்னன்

 0
நளின் Nalin

நளி - குவிந்து, இணைந்து, செறிவு (நளியென் கிளவி செறிவு மாகும் ...: தொல்காப்பியம் - 325)

 1
நவின் Navin

நவியம் - புதுமை

 2
நவிரன் Naviran

நவிர் - உச்சி, உச்சம்  

 0
நவிர் Navir

நவிர் - உச்சி, உச்சம்

 2
நவிலன் Navilan

பாடகன், விரும்பப்படுபவன் (நவில் - கற்றல், பாடுதல், விரும்புதல்)

 1
நவில் Navil

பாடகன், விரும்பப்படுபவன் (நவில் - கற்றல், பாடுதல், விரும்புதல்)

 2
நிகரன் Nikaran

நிகர் - ஒளி, சிறப்பு

 2
நிவன் Nivan

உயர்ந்த

 2
நெடுஞ்செழியன் Nedunchezhian  1
நெதிரன் Nethiran

நெதி - செல்வம், முத்து

 1
பகலோன் Pakalon

கதிரவன்

 1
பண்ணன் Pannan

ஒரு சங்க காலக் குறுநில மன்னன்

 0
பதுமன் Pathuman

ஒரு சங்கப் புலவர் பெயர்

 0
பரிதி Parithi

கதிரவன்

 1
பாணன் Paanan

பாடகன், ஒரு சங்க காலக் குறுநில மன்னன்

 0
பாண்டியன் Pandiyan

மூவேந்தர்களுள் ஒருவரான பாண்டிய மன்னர்கள்; பாண்டிய மன்னன்

 1
பாரி Pari  1
புகழரசன் Pukazharasan

புகழ் மிக்க அரசன்

 0
புகழ் Pukazh

புகழ் மிக்கவன்; மற்றவர் புகழும்படி செயலாற்றுபவன்

 1
பூங்குன்றன் Poonkundran

ஒரு புலவரின் பெயர்

 0
பொற்செழியன் Porchezhiyan  3
மகிழ்நன் Makizhnan  2
மணிமாறன் Manimaaran  1
மதிவாணன் Mathivaanan  1
மாயோன் Mayon

முருகன்

 1
மாறன் Maran  1
முகிலன் Mukilan

மேகம் போன்றவன் (முகில் - மேகம்)

 0
முகில் Mukil

மேகம் போன்றவன் (முகில் - மேகம்)

 1
முருகன் Murugan

முருகன்

 0
யாழன் Yaazhan

யாழ் கருவி இசைப்பவன்

 0
வளர்பிறையன் Valarpiraiyan

பிறை நிலவு போல் வளர்பவன்

 1
வளவன் Valavan

சோழ மன்னர்களைக் குறிக்கும் பெயர்

 1
வள்ளுவன் Valluvan

திருக்குறள் இயற்றிய திருவள்ளுவர்

 2
வழுதி Vazhuthi

பாண்டிய மன்னன் (வழுதி - பாண்டிய மன்னர்களைக் குறிக்கும் பெயர்)

 1
வினயன் Vinayan

செயல் வீரன்.  வினை - செயல்

 1
வியன் Viyan

வியன் - பெருமை, வியப்பு, சிறப்பு

 3
வீயன் Veeyan

மலர் போன்றவன். வீ - மலர், மரகந்தம் [வீகமழ் நெடுஞ்சினை....... (புறநானூறு - 36)]

 1
வேந்தன் Venthan/ Vendhan

அரசன், மன்னன்

 1
தமிழ் பெயர் English Name விளக்கம் விருப்பம்
அகிலா Akila

நறுமணம் மிக்கவள் (அகில் - ஒரு நறுமணம் மிக்க மரம்)

 1
அகை Akai

மலர்

 3
அங்கை Angai

அழகிய கைகள் கொண்டவள் [அங்கை (அம் + கை): அம் - அழகிய]

 1
அச்சிரா Achira

குளிர்ச்சியானவள் (அச்சிரம் - முன்பனிக்காலம்)

 2
அணிமலர் Animalar

அழகிய மலர் போன்றவள் (அணி -அழகு)

 1
அதரா Athera

வழியாய் விளங்குபவள் (அதர் - வழி)

 3
அதிரா Athira

அதிரல் மலர் (மல்லிகை) - Jasmine

 3
அனிச்சா Anicha  1
அமரா Amara  1
அமலா Amala

அமலை - செழிப்பு

 1
அமலி Amali

அமலை - செழிப்பு

 0
அரண்யா Aranya  1
அல்லி Alli  0
அவினி Avini  0
அவிரா Avira  0
ஆரலி Aarali  0
ஆர்த்தி Aarthi  1
இனியா Iniya  2
இன்பா Inba  1
இளமதி Ilamathi  1
இழையினி Izhaiyini  1
உசிதா Usitha  0
எமி Emy

எமி - தனிமை 

 1
எழிலரசி Ezhilarasi  0
எழிலி Ezhili

மேகம்

 0
ஐயை Aiyai

ஐயை

 0
ஓவியா Oviya  0
கனலி Kanali  2
கனிமொழி Kanimozhi  1
கமனி Kamani  1
கமழி Kamazhi  2
கயல் Kayal  1
கயல்விழி Kayalvizhi  1
கயில் Kayil  1
கலை Kalai  1
கலைச்செல்வி Kalaiselvi  1
கலைமகள் Kalaimagal  1
கலையரசி Kalaiyarasi  2
கவினி Kavini  3
குறிஞ்சி Kurinji

குறிஞ்சி மலர்

 0
குழலி Kuzhali

நீண்ட கூந்தலுடையவள்

 0
கொன்றை Kondrai

கொன்றை மலர்

 0
கோதை Kothai

பூமாலை, முத்து மாலை

 0
சதிரி Sathiri

சாமர்த்தியமுடையவள்

 1
சாரலா Saarala

சாரல் -  மலைச்சரிவு, மழைத்தூறல்

 1
சாலினி Saalini

சால் - சிறந்த 

 1
சிதரா Sithara

சிதர் - மழைத்துளி, பூந்தாது

 1
சீர்த்தி Seerthi

புகழ்

 1
சென்னி Senni

மலை உச்சி

 1
செல்வி Selvi

தலைவி, மகள், செல்வச் செழிப்புடையவள்

 1
செவ்வி Sevvi

அழகு

 1
ததரா Thathara

ததர் - அடர்ந்த

 1
தமிழ்செல்வி Thamilselvi/ Thamizhselvi

தமிழ்செல்வி

 0
தமிழ்மகள் Thamilmakal/ Thamizhmakal

தமிழ்மகள்

 0
தாரணி Tharani

அழகிய மலர் மாலை (தார் - மாலை; அணி - அழகு)

 0
தாளினி Thalini

ஓர் மருத்துவ மரம்

 0
துகிரா Thukira

துகிர் - பவளம் (பொன்னுந் துகிரு முத்தும்...... : புறநானூறு - 218))

 2
தென்றல் Thendral

தென்றல்

 0
தேன்மொழி Thenmozhi

இனிமையாகப் பேசுபவள்

 0
நந்தினி Nandhini

நந்துதல் - தழைத்தல் (காண நந்திய செந்நிலப் பெருவழி.......... : முல்லைப்பாட்டு - 97)

 0
நந்தியா Nanthiya/ Nandhiya

நந்துதல் - தழைத்தல் (காண நந்திய செந்நிலப் பெருவழி.......... : முல்லைப்பாட்டு - 97)

 0
நன்முகை Nanmukai

நல்ல அரும்பு

 0
நன்மொழி Nanmozhi

இனிமையானப் பேசுபவள்

 0
நறுமலர் Narumalar

நறுமணம் மிக்க மலர்

 0
நறுமுகிழ் Narumukizh

நறுமணம் மிக்க அரும்பு (முகிழ் - அரும்பு)

 0
நறுமுகை Narumukai

நறுமணம் மிக்க அரும்பு (முகை - அரும்பு)

 0
நறுவீ Naruvi

நறுமணம் மிக்க மலர் (வீ - மலர்)

 0
நல்லினி Nallini

சேர அரசியின் பெயர்

 0
நளி Nali

நளி - குவிந்து, இணைந்து, செறிவு (நளியென் கிளவி செறிவு மாகும் ...: தொல்காப்பியம் - 325)

 0
நளினா Nalina

நளி - குவிந்து, இணைந்து, செறிவு (நளியென் கிளவி செறிவு மாகும் ...: தொல்காப்பியம் - 325)

 0
நளினி Nalini

நளி - குவிந்து, இணைந்து, செறிவு (நளியென் கிளவி செறிவு மாகும் ...: தொல்காப்பியம் - 325)

 0
நவிரா Navira

நவிர் - உச்சி, மலை உச்சி

 0
நவ்வி Navvi

மான்குட்டி

 1
நித்திலா Nithila

நித்திலம் - முத்து

 0
நிரல்யா Niralya

நிரல் - ஒழுங்கு, வரிசை

 0
நிறைமதி Niraimathi

முழு நிலவு

 0
நீள்விழி Neelvizhi

நீண்ட விழி

 0
பனிமலர் Panimalar

பனிமலர்

 0
பூங்குழலி Poonkuzhali

பூக்கள் நிறைந்த கூந்தலுடையவள்

 0
பூங்கொடி Poonkodi

பூக்கள் நிறைந்த கொடி போன்றவள்

 0
பொன்னி Ponni

காவிரி நதி

 0
பொன்மணி Ponmani

பொன்மணி

 0
பொய்கை Poykai

இயற்கையாக உருவான நீர் நிலை

 0
பொற்கொடி Porkodi

பொன்னால் ஆன கொடி

 0
மஞ்சு Manju

மஞ்சு - வெண்மேகம் (மஞ்சென நின்றுலவும் .....: சீவகசிந்தாமணி 2853)

 1
மஞ்சுளா Manjula

மஞ்சு - வெண்மேகம் (மஞ்சென நின்றுலவும் .....: சீவகசிந்தாமணி 2853)

 0
மணிமலர் Manimalar  1
மணிமொழி Manimozhi  1
மலர் Malar  1
மலர்கொடி Malarkodi  1
மலர்மகள் Malarmakal  1
மலர்விழி Malarvizhi  2
மென்மொழி Menmozhi  1
யாழினி Yazhini

யாழ் - இசைக் கருவி

 2
வளர்மதி Valarmathi  1
வள்ளி valli

கொடி, கைவளை, குறிஞ்சிநிலப் பெண்

 1
வான்மகள் Vaanmakal  1
வெண்ணிலா Vennila

வெண்ணிலா

 1
வெண்பா Venba  3
வெண்மணி Venmani  1
வெண்மதி Venmathi  1
வேல்விழி Velvizhi  1
வைனி Vaini

வை - கூர்மை

 1
பெருமிதம்