கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்கற்ற செலச்சொல்லு வார்.
அவையஞ்சாமை (குறள் எண்: 722)
The early Tamil poetry was rather unique not only by virtue of the fact that some of its features were so unlike everything else in India, but by virtue of its literary excellence; those 26,350 lines of poetry (Sangam poetry) promote Tamil to the rank of one of the great classical languages of the world – though the world at large only just about begins to realise it.
[தமிழாக்கம்: தமிழின் பண்டைய சங்க இலக்கியம் மிகவும் தனித்தன்மை கொண்டது, இந்தியாவில் வேறு எங்கும் காணப்படாத தனித்த தன்மைகளைக் கொண்டிருப்பதால் மட்டுமல்ல, அதன் உயர்ந்த இலக்கியத் தரத்தாலும் தான்; அந்த 26,350 சங்க இலக்கியப் பாடல் வரிகள் தமிழை உலகின் தலைச் சிறந்த செம்மொழிகளில் ஒன்றாக உயர்த்தியுள்ளது - இருப்பினும், இதை இந்த உலகம் இப்பொழுதுதான் உணரத்துவங்கியுள்ளது].
It is only the Tamil Culture that has produced – uniquely so in India – an independent indigenous literary theory of a very high standard, including metrics and prosody, poetic and rhetoric.
[தமிழாக்கம்: இந்தியாவிலேயே தனித்தன்மை கொண்ட, இசை ஒழுங்கு, செய்யுள் இலக்கணம், அணி இலக்கணம், சொற்பொருள் நயம் மிக்க மொழி ஆளுமை கொண்ட தனித்த தற்சார்பு மிக்க உயர்தர இலக்கிய வடிவத்தை தமிழ்க் கலாச்சாரம் மட்டுமே படைத்துள்ளது].
There is yet another important difference between Tamil and other Dravidian literary languages: the metalanguage of Tamil has always been Tamil, never Sanskrit.
[தமிழாக்கம்: தமிழுக்கும் மற்ற திராவிட இலக்கிய மொழிகளுக்கும் ஒரு முக்கிய வேறுபாடு உண்டு: தமிழ் மொழியின் உள்ளீடுகள் என்றைக்கும் தமிழாக மட்டுமே இருந்திருக்கிறது; சமஸ்கிருதம் அல்ல].
In most Indian languages, the technical gobbledygook is Sanskrit; in Tamil, the gobbledygook is ultra-Tamil.
[தமிழாக்கம்: பெரும்பான்மையான இந்திய மொழிகளின் நுட்பமான மொழியியல் உள்ளீட்டுக் கூறுகள் சமஸ்கிருதம்; ஆனால் தமிழின் மொழியியல் உள்ளீட்டுக் கூறுகள் அடர்ந்த தூய தமிழே].
The creation of a literature of very high standard and of a rich and redefined linguistic medium – found expression in the excellent descriptive grammar Tolkaappiyam, one of the most brilliant achievements of human intellect in India.
[தமிழாக்கம்: உயர்தர இலக்கியப் படைப்பும், அடர்த்தியான மெருகூட்டப்பட்ட மொழியியல் கட்டமைப்பும் கொண்ட மிகச்சிறந்த இலக்கண விளக்க நூல் தொல்காப்பியம். தொல்காப்பியம், இந்தியாவின் ஆகச்சிறந்த மனித அறிவாற்றல் சாதனைகளுள் ஒன்று].
The very beginnings of Tamil literature manifest clear traces of Aryan influence just as the very beginnings of the Indo-Aryan literature, the Rgvedic hymns show traces of Dravidian influence. This too, is today an undisputed fact.
[தமிழாக்கம்: தமிழின் மூத்த இலக்கியங்களிலேயே ஆரியத்தின் சுவடுகளைக் காணமுடிகிறது; அதுபோல், மிக மூத்த ஆரிய இலக்கியமான ரிக் வேத பாடல்களில் கூட திராவிட மொழியின் (தமிழின்) சுவடுகள் தெரிகிறது. இதுவும் இன்று மறுக்க முடியாத உண்மை].
Tamil cultural tradition is independent, not derived, not imitative; it is pre-sanskritic, and from this point of view Tamil alone stands apart when compared with all other major languages and literatures of India.
[தமிழாக்கம்: தமிழ்க் கலாச்சாரப் பாரம்பரியம் தற்சார்பு கொண்டது, எதனுடைய தொடர்ச்சியும் இல்லை, எதனுடைய நகலும் இல்லை, சமஸ்கிருதத்திற்கும் முந்தயது. அதன்படிப் பார்த்தால் தமிழ் மட்டுமே இந்தியாவின் மற்ற மொழிகளிலிருந்தும் மற்ற இலக்கியங்களிலிருந்தும் முற்றும் தனித்தன்மையுடன் வேறுபட்டு நிற்கிறது].
Tamil literature is the only Indian literature, which is, at least in its beginnings and in its first and most vigorous bloom, almost entirely independent of Aryan and specifically Sanskrit influences.
[தமிழாக்கம்: இந்திய இலக்கியங்களில் தமிழ் இலக்கியம் மட்டுமே அதன் தோற்றத்தின் பொழுதும் முதல் பெரும் எழுச்சியிலும் உச்சத்திலும் ஆரியத்தின் குறிப்பாக சமஸ்கிருதத்தின் தாக்கம் ஏதுமின்றி முற்றிலும் தனித்துக் காணப்படுகிறது].
Tamil literature is the only Indian literature, which is both classical and modern; while it shares antiquity with much of Sanskrit literature and is as classical, in the best of the word, as e.g. the ancient Greek poetry, it continues to be vigorously living modern writing of our days.
[தமிழாக்கம்: இந்திய இலக்கியங்களில் பழமைக்குப் பழமையாகவும் புதுமைக்குப் புதுமையாகவும் நிற்கும் ஒரே இலக்கியம் தமிழ் இலக்கியம் மட்டுமே. பழமையில் சமஸ்கிருத இலக்கியங்களுக்கு ஈடாக நின்று; பண்டைய கிரேக்க இலக்கியங்களைப் போன்று உலகில் மிகச் செம்மையான உயர்தர இலக்கியங்களைக் கொண்டு தொடர்ந்து இன்றைய காலத்திலும் புதிய படைப்புகளுடன் வலிமையும் இளமையுமாக வாழ்ந்துகொண்டிருக்கிறது].
Tamil, one of the two classical languages of India, is the only language of contemporary India which is recognizably continuous with a classical past.
[தமிழாக்கம்: தமிழ், இந்தியாவின் இரண்டு செம்மொழிகளில் ஒன்று, இனங்காணும்படியான தொன்மையின் தொடர்ச்சியாக நிகழ்காலத்திலும் உயிர்ப்புடன் இயங்கும் ஒரே இந்திய மொழி].
The classical Tamil poetry is pre-eminently of this world; it makes almost no allusions to supernatural meddling in worldly affairs.
[தமிழாக்கம்: சங்கத்தமிழ்ப் பாடல்கள் உலகின் மிகச்சிறந்தவை; நடைமுறை வாழ்வியலில் இயற்கைக்கு மீறிய செயல்களின் குறுக்கீடு பற்றிய குறிப்புகள் ஏதும் இல்லாதவை].
The genre of akam poetry, i.e. poetry of the “inner world”, speaks of private life. This is the tender, intimate love-poetry, anonymous, stereotyped, including some of the greatest love poems ever composed in world literature: a poetry based on a concept definitely broader and deeper than the Sanskritic kaama.
[தமிழாக்கம்: சங்க இலக்கியத்தின் அகப்பாடல் வகை, பகிர இயலாத தனிப்பட்ட அக வாழ்வின் பதிவு. இவை, மெல்லிய அந்தரங்க காதல் பாடல்கள்; பெயர் அறியப்படாத மாந்தர்களால் கற்பனைக்கு எட்டாத தரத்தில், இலக்கிய உலகில் இயற்றப்பட்ட மிகச் சிறந்த காதல் பாடல்கள் சிலவற்றை உள்ளடக்கியது. இப்பாடல்களின் கருத்துப்படிவம் சமஸ்கிருதத்தின் காமசூத்திரத்தை விட அகலமும் ஆழமும் கொண்டிருப்பது உறுதி].
Sangam poems - These poems are 'classical,' i.e., early, ancient; they are also 'classics,' i.e., works that have stood the test of time, the founding works of a whole tradition. Not to know them is not to know a unique and major poetic achievement of Indian civilization.
[தமிழாக்கம்: சங்கப்பாடல்கள் செம்மையானவை; காலத்தால் மிகவும் முற்பட்ட தொன்மை கொண்டவை; காலம் கடந்து நிலைத்து நின்று ஒரு பெரும் இலக்கிய பாரம்பரியத்தின் அடித்தளமாக இருப்பவை. இது பற்றித் தெரியாதிருப்பது இந்திய கலாச்சாரத்தின் தனித்தன்மை கொண்ட ஒரு பெரும் இலக்கிய சாதனையை அறியாதிருப்பதாகும்].
Sangam poems - These poems are not just the earliest evidence of the Tamil genius. The Tamils, in their 2,000 years of literary effort, wrote nothing better.
[தமிழாக்கம்: சங்கப்பாடல்கள் தமிழர்களின் பேரறிவாற்றலின் மூத்த சான்று மட்டுமல்ல; தமிழர்கள், இதன் பிறகான தங்களது 2000 ஆண்டு கால இலக்கிய முயற்சியில் இதனைக் காட்டிலும் ஒன்றை படைக்க முடியாததே இதன் சிறப்பு].
In Sangam poems, the poet’s language is not only Tamil: landscapes, the personae, the appropriate moods, all become a language within a language.
[தமிழாக்கம்: சங்கப் பாடல்களில் புலவரின் மொழி தமிழ் மட்டுமல்ல; நிலப்பரப்பு, மாந்தர்கள், மன உணர்வுகள் என அனைத்தும் மொழிக்குள் இன்னொரு மொழியாக விளங்குகிறது].
The Dravidians, and in particular the Tamils, have contributed a great deal to the cultural richesse of the world: Pallava and Chola temple architecture, Chola bronze sculpture, the dance-form known as Bharathanatyam, the so-called Carnatic system of music. But, probably the most significant contribution is that of Tamil literature, which still remains to be “discovered” and enjoyed by the non-Tamilians and adopted as an essential and remarkable part of universal heritage.
a | aa | i | ii | u | uu | e | ee | ai | o | oo | au | q | ||
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | ஔ | ஃ | ||
k | க் | க | கா | கி | கீ | கு | கூ | கெ | கே | கை | கொ | கோ | கௌ | |
ng | ங் | ங | ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ | |
s | ச் | ச | சா | சி | சீ | சு | சூ | செ | சே | சை | சொ | சோ | சௌ | |
nj | ஞ் | ஞ | ஞா | ஞி | ஞீ | ஞு | ஞூ | ஞெ | ஞே | ஞை | ஞொ | ஞோ | ஞௌ | |
d | ட் | ட | டா | டி | டீ | டு | டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ | |
N | ண் | ண | ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ | |
th | த் | த | தா | தி | தீ | து | தூ | தெ | தே | தை | தொ | தோ | தௌ | |
n- | ந் | ந | நா | நி | நீ | நு | நூ | நெ | நே | நை | நொ | நோ | நை | |
p | ப் | ப | பா | பி | பீ | பு | பூ | பெ | பே | பை | பொ | போ | பௌ | |
m | ம் | ம | மா | மி | மீ | மு | மூ | மெ | மே | மை | மொ | மோ | மௌ | |
y | ய் | ய | யா | யி | யீ | யு | யூ | யெ | யே | யை | யொ | யோ | யௌ | |
r | ர் | ர | ரா | ரி | ரீ | ரு | ரூ | ரெ | ரே | ரை | ரொ | ரோ | ரௌ | |
l | ல் | ல | லா | லி | லீ | லு | லூ | லெ | லே | லை | லொ | லோ | லௌ | |
v | வ் | வ | வா | வி | வீ | வு | வூ | வெ | வே | வை | வொ | வோ | வௌ | |
zh | ழ் | ழ | ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ | |
L | ள் | ள | ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ | |
R | ற் | ற | றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ | |
n | ன் | ன | னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ | |
J | ஜ் | ஜ | ஜா | ஜி | ஜீ | ஜு | ஜூ | ஜெ | ஜே | ஜை | ஜொ | ஜோ | ஜௌ | |
S | ஸ் | ஸ | ஸா | ஸி | ஸீ | ஸு | ஸூ | ஸெ | ஸே | ஸை | ஸொ | ஸோ | ஸௌ | |
SH | ஷ் | ஷ | ஷா | ஷி | ஷீ | ஷு | ஷூ | ஷெ | ஷே | ஷை | ஷொ | ஷோ | ஷௌ | |
H | ஹ் | ஹ | ஹா | ஹி | ஹீ | ஹு | ஹூ | ஹெ | ஹே | ஹை | ஹொ | ஹோ | ஹௌ |