வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்நுண்ணவை அஞ்சு பவர்க்கு.
அவையஞ்சாமை (குறள் எண்: 726)
பெண்மை வாழ்கென்று கூத்திடு வோமடா!
பெண்மை வெல்கென்று கூத்திடு வோமடா!
தண்மை இன்பம்நற் புண்ணியஞ் சேர்ந்தன
தாயின் பேரும் சதியென்ற நாமமும்.
அன்பு வாழ்கென் றமைதியில் ஆடுவோம்.
ஆசைக் காதலைக் கைகொட்டி வாழ்த்துவோம்.
துன்பம் தீர்வது பெண்மையி னாலடா!
சூரப் பிள்ளைகள் தாயென்றும் போற்றுவோம்.
வலிமை சேர்ப்பது தாய்முலைப் பாலடா!
மானஞ் சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள்
கலிய ழிப்பது பெண்க ளறமடா!
கைகள் கோர்த்துக் களிப்பதுநின் றாடுவோம்.
பெண்ண றத்தின ஆண்மக்கள் வீரந்தான்
பேணு மாயின் பிறகொரு தாழ்வில்லை;
கண்ணைக் காக்கும் இரண்டிமை போலவே
காத லின்பத்தைக் காத்திடு வோமடா!
சக்தி யென்ற மதுவையுண் போமடா!
தாளங் கொட்டித் திசைகள் அதிரனேவ,
ஒத்தி யல்வதொர் பாட்டும் குழல்களும்
ஊர்வி யக்கக் கவித்துநின் றாடுவோம்.
உயிரைக் காக்கும், உயிரினைச் சேர்த்திடும்;
உயிரினுக் குயிராய் இன்ப மாகிடும்;
உயிரினும் இந்தப் பெண்மை இனிதடா!
ஊது கொம்புகள், ஆடு களிகொண்டே
‘போற்றி தாய்’ என்று தோள்கொட்டி யாடுவீர்
புகழ்ச்சி கூறுவிர் காதற் கிளிகட்கே,
நூற்றி ரண்டு மலைகளைச் சாடுவோம்
நுண்ணி டைப்பெண் ணொருத்தி பணியிலே.
‘போற்றி தாய்’ என்று தாளங்கள் கொட்டடா!
‘போற்றி தாய் என்று பொற்குழ லூதடா!
காற்றி லேறியவ விண்ணையுஞ் சாடுவோம்
காதற் பெண்கள் கடைக்கண் பணியிலே
அன்ன மூட்டிய தெய்வ மணிக்கையின்
ஆணை காட்டில் அனலை விழுங்குவோம்;
கன்னத் தேமுத்தம் கொண்டு களிப்பினும்
கையைத் தள்ளும்பொற் கைகளைப் பாடுவோம்.
ஒருவரது முகம் அவரது மனதை பிரதிபளிக்கும். ஒருவரது முக மாறுதல்களை வைத்தே அவரது மனதின் எண்ண ஓட்டத்தை அறிந்து கொள்ள முடியும்.
உறவுகள் தொலைவில் இருந்தால் எப்போதாவது சந்திக்கும் போது அவர்களிடத்தில் சண்டை குறைவாக இருப்பதையும், பக்கத்தில் இருக்கும் உறவுகளிடம் எப்போதுமே பழக வாய்ப்பு இருப்பதால் அடிக்கடி ஏதும் பிரச்சனை வருவதையும் அன்றாடம் நாம் காணலாம்.
மேலோட்டமாக உழுவதை விட ஆழமாக உழுதால் அடிமண் மேலே வரும், இதனால் பயிருக்கு செழிப்பு.
அதுபோல், நூல்கள் படிக்கும் போதும், கல்வி கற்கும் போதும், மேலோட்டமாக தெரிந்து கொள்ளாமல் ஆழ்ந்து தெரிந்துகொள்ளல் அவசியமாகும். அதுவே நிலைக்கும். மற்றவை சில தினங்களில் மறந்துவிடும்.
இப்பழமொழி அறிவுரை மட்டும் கூறாமல் பண்டைய தமிழர் விவசாய அறிவையும் விளக்குகிறது.
அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.
அடி - திருவடி (இறைவனின் திருவடி)
இறைவனின் திருவடியைச் சரணடைந்தால், அத்திருவடி நம்மைக் காப்பதுபோல் அண்ணன் தம்பி கூட காக்கமாட்டார்கள்.
குறிப்பு:
'அடி' என்பதை 'அடி உதை' என்று தவறாக பொருள் கொள்ளப்பட்டு, அடி உதை உதவுவதைப் போல் அண்ணன் தம்பி உதவமாட்டார்கள் என்று தவறாக கையாளப்படுகிறது.
ஆறின கஞ்சி பழங் கஞ்சி.
ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.
ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும்[ நாலடியார்] இரண்டும்[குறள்] சொல்லுக்குறுதி.
இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை.
இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்கு குலை அறுப்பான்.
ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
கடலைத் தாண்ட ஆசையுண்டு கால்வாயைத் தாண்டக் கால் இல்லை.
காய்த்த மரம் தான் கல் அடிபடும்.
காற்று உள்ளபோதே தூற்றிக்கொள்.
குந்தித் தின்றால் குன்றும் மாளும்.
"குருவிக்கு தக்க ராமேசுவரம்" என்று தவறாகக் கூறப்பட்டு, பொருள் கொள்ளப்பட்டு பயன்படுத்தப் படுகிறது.
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.
கெடுவான் கேடு நினைப்பான்.
கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமா?
சாட்சிக்காரன் காலில் விழுவதிலும் சண்டைக்காரன் காலில் விழலாம்.
சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்.
"சோழியன் குடுமி சும்மா ஆடாது" என்று தவறாக கூறப்பட்டு, பொருள் கொள்ளப்பட்டு பயன்படுத்தப் படுகிறது.
தருமம் தலைகாக்கும்.
தலைக்கு வந்தது தலைப் பாகையோடு போனது.
நடந்தால் நாடெல்லாம் உறவு , படுத்தால் பாயும் பகை.