தமிழ் உலகம்

தினம் ஒரு குறள்

ஓதி உணர்ந்தும் பிறர் க்குரைத்தும் தானடங்காப்
பேதையின் பேதையார் இல்.

பேதைமை (குறள் எண்: 834)

பொருளுரை:
நூல்களை ஓதியும், அவற்றின் பொருளை உணர்ந்தும், பிறர்க்கு எடுத்துச் சொல்லியும் தான் அவற்றின் நெறியில் அடங்கி ஒழுகாத பேதைபோல் வேறு பேதையர் இல்லை.
உறுப்பினர் பகுதி
 
 3
 
கடலும் பணியும்
 
பிரிவு
 
 
தலைப்பு
கடலும் பணியும்
 
எப்போது விடியுமென புலம்பாதே நண்பா;
நீதேடும் விடியல் சேவலின் கூவலில்லை;
விதையிலுள்ளது; கதிரவனுக்கும் கண் கூசச்
செய்வது; காலனுக்கும் கண்ணி வைப்பது.

விடியும்வரை காத்திரு, முடியாதென்றால் பெயர்த்தெடு;
விளக்கொளிகண்டு மயங்காதே, வான்வெளியானாலும் தயங்காதே;
மேல்நோக்கி கிளை வளர்வதால் உயர்வுமல்ல,
கிழ்நோக்கி வேர் படர்வதால் தாழ்வுமல்ல.

புலம்பாதே நண்பா புலம்பலும் புறமுதுகுதான்;
நெஞ்சை நிமிர்த்தி நில்! பாயும் அம்பும்
சிதறி ஓடட்டும்; கதறி வீழட்டும்; காத்திரு
நண்பா, காலம் கனியும்! கடலும் பணியும்!!


பெருமிதம்