தமிழ் உலகம்

தினம் ஒரு குறள்

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்.

அறன்வலியுறுத்தல் (குறள் எண்: 33)

பொருளுரை:

          செய்யக்கூடிய வகையால், எக்காரணத்தாலும் விடாமல் செல்லுமிடமெல்லாம் அறச்செயலைப் போற்றிச் செய்ய வேண்டும்.

உறுப்பினர் பகுதி

ஒரு மொழியின் வளர்ச்சிக்குப் புதிய சொற்களைச் சேர்ப்பது இன்றியமையாதது. இன்றைய அறிவியல் தினமும் பல புதிய தொழில்நுட்பங்களையும் கண்டுபிடிப்புகளையும் நமது வாழ்வில் சேர்த்துக் கொண்டே இருக்கிறது. அதற்கான புதிய தமிழ்ச் சொற்களையும் உருவாக்கி சேர்த்து நமது அகராதியை உயிர்ப்புடன் வைத்திருப்பது இன்றையத் தேவை. அப்படி சேர்க்கப்படாவிட்டால் ஒரு மொழி தன் கால ஓட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் தேக்கமடைந்து, நிகழ்காலத்திற்கு பொருந்தாமல் செயலிழந்து விடும்.

ஆங்கில மொழியில் ஒவ்வொறு ஆண்டும் சராசரியாக 4000 புதிய சொற்கள் சேர்க்கப்படுகிறது. நீண்ட விளக்கத்தை சுருங்கச் சொல்லவும், புதிய அறிவியல் தொழில்நுட்ப, மருத்துவ சொற்களும் பெரிதும் சேர்க்கப்படுகிறது.

இன்று, நம் அனைவராலும் பயன்படுத்தப்படும் 'இணையம்', 'வலைதளம்', 'அலைபேசி' போன்ற சொற்கள் நமது அகராதியை விரிவு செய்த புதிய கலைச் சொற்களே! இதுபோல், ஆழ்ந்த பொருளுடன் கூடிய சுருக்கமான பல புதிய சொற்கள் உருவாக்கிச் சேர்க்க வேண்டும்.

புதிய தொழில்நுட்பங்களுக்கான தமிழ்ச் சொற்கள் மட்டுமல்லாது தமிழில் புகுந்து பெரிதும் வழக்கில் இருக்கும் வேற்று மொழிச் சொற்களை விலக்கி ஆழ்ந்த பொருள் மிக்க நல்ல தமிழ்ச் சொற்களை பயன்படுத்த முயல வேண்டும். 'பிரச்சாரம்' என்ற வடமொழிச் சொல்லுக்கு பதில் 'பரப்புரை' என்ற சொல்லையும், 'சக்தி' என்ற சொல்லுக்கு 'ஆற்றல்' என்ற தமிழ்ச் சொல்லையும் நாம் இப்பொழுது பெரிதும் பயன்படுத்தத் துவங்கியுள்ளோம்.

இப்பகுதியில், கலைச்சொற்களையும் தமிழ்ச்சொற்களையும் சேகரிக்க முயல்கிறோம். இதில், மேலும் சொற்களைச் சேர்த்து வளப்படுத்த உங்களுக்கு தெரிந்த சொற்களை எங்களுக்கு அனுப்புங்கள்.

 
English தமிழ்ச்சொற்கள்
No result
Accelerometer முடுக்க அளவி
Access code அணுகல் குறியன்
Accessories துணைக்கருவிகள்
Account தனிக்கணக்கு
Alias மறுபெயர்
Alphanumeric எண்ணெழுத்து
Analog தொடர்முறை
Animation அசைவூட்டம்
Antivirus நச்சுநிரல் நீக்கி
Aperture நுண்துளை
App குறுஞ்செயலி
Apple அரத்திப்பழம், குமளிப்பழம்
Applet குறுநிரல்
Application Software பயன்பாட்டு மென்பொருள்
Apricot சர்க்கரை பாதாமி
Arrow Key அம்பு விசை
Aspect ratio வடிவ விகிதம்
Asynchronous ஒத்திசையா
Attenuation தகவல் தேய்வு
Authorization ஒப்புச் சான்று
Auto flash தன்னியக்க மின்வெட்டொளி
Auto focus தன்னியக்க குவியம்
Automatic backup தன்னியக்க காப்புநகல்
Avocado வெண்ணைப் பழம்
Backhaul பின்சுமை
Backup காப்புநகல்
Banana வாழைப்பழம்
Band அலைக்கற்றை
Bandwidth அலைக்கற்றை அகலம்
Barometer காற்றழுத்தமானி
Battery மின்கலம்
Battery மின்கலன்
Beam ஒளிக்கற்றை
Bell fruit பஞ்சலிப்பழம்
Benchmarking திறன்மதிப்பீடு/ தரப்படுத்தல்
Bicycle மிதிவண்டி
Bilberry அவுரிநெல்லி
Binary இருமம்
Binary Number இருநிலை எண்
Biology உயிரியல்
Bit துமி
Bitter Gourd பாகற்காய்
Bitter Watermelon கெச்சி
Black Pepper மிளகு
Blackberry நாகப்பழம்
Blackcurrant கருந்திராட்சை, கருங்கொடிமுந்திரி
Blueberry அவுரிநெல்லி
Bluetooth ஊடலை
Botany தாவரவியல்
Bottle Gourd சுரைக்காய்
Breadfruit சீமைப்பலா, ஈரப்பலா
Brinjal கத்தரிக்காய்
Broad beans அவரைக்காய்
Broadband அகல அலைக்கற்றை
Browser உலவி
Browser selection உலவித் தெரிவு
Browser selection உலவித் தெரிவு
Buffer memory இடையக நினைவகம்
Buffering இடையகப்படுத்தல்
Built-in உள்ளமைவு
Bus பேருந்து
Cable Modem வட மாற்றி
Calculator கணிப்பான்
Cantaloupe மஞ்சள் முலாம்பழம்
Carambola விளிம்பிப்பழம்
Cashewfruit முந்திரிப்பழம்
Cellphone tower அலைப்பேசி கோபுரம்
Cellphone/ Mobile phone அலைபேசி/ கைப்பேசி
Cellular கண்ணறை
Cellular Service கண்ணறை சேவை
Charger மின்னூக்கி
Chemical வேதிப் பொருட்கள்
Chemistry வேதியியல்
Click சொடுக்கு
Cluster Beans கொத்தவரங்காய்
Computer கணினி
Cranberry குருதிநெல்லி
Cucumber வெள்ளரிக்காய்
Curry Leaf கறிவேப்பிலை
Custard Apple சீத்தாப்பழம்
Cyber மின்வெளி
DSL (Digital Subscriber Loop) உறுப்பினர் எண்ணிலக்க இணைப்பு
Devil Fig பேயத்தி
Director இயக்குனர்
Download பதிவிறக்கம்
Drumstick முருங்கைக்காய்
Durian முள்நாரிப்பழம்
Economics பொருளாதாரம்
Email மின்னஞ்சல்
Energy ஆற்றல்
Engineering பொறியியல்
Eugenia Rubicunda சிறுநாவல்
Facebook முகநூல்
Fig அத்திப்பழம்
Firewall தீயரண்
Focus குவியம்
Font எழுத்துரு
GPS தடங்காட்டி
Garlic பூண்டு, வெள்ளைப் பூண்டு
Ginger இஞ்சி
Gooseberry நெல்லிக்காய்
Grape திராட்சைப்பழம்
Green Gram பச்சைப்பயறு, பாசிப்பயறு
Guava கொய்யாப்பழம்
Harddisk வன்தட்டு
Hardware வன்பொருள்
Harfarowrie அரைநெல்லி
Helmet தலைக்கவசம்
Hotspot பகிரலை
ISP (Internet Service Provider) இணையச் சேவை வழங்குநர்
Instagram படவரி
Internet இணையம்
Jackfruit பலாப்பழம்
Key குமிழ்
Keyboard விசைப்பலகை
Kiwi fruit பசலிப்பழம்
LAN (Local Area Network) குறும்பரப்பு வலைப்பின்னல்
Lady's finger வெண்டைக்காய்
Laptop மடிக்கணினி
Laser சீரொளி
Logo இலச்சினை
Lychee விளச்சிப்பழம்
Mango மாம்பழம்
Meme போன்மி
Messenger பற்றியம்
Modem மாற்றி
Monitor கணினித்திரை
Multimedia பல்லூடகம்
Mushroom காளான்
Mustard greens கடுகுக் கீரை
Onion வெங்காயம்
Optical Fiber ஒளியிழை
Orange நரந்தம்பழம், தோடைப்பழம்
Papaya பப்பாளி
Password கடவுச்சொல்
Peach குழிப்பேரி
Peanut, Groundnut நிலக்கடலை, வேர்க்கடலை
Peas பட்டாணி
Physics இயற்பியல்
Plantain வாழைக்காய்
Plum ஆல்பக்கோடா
Potato உருளைக் கிழங்கு
Pulses பருப்பு
Pumpkin பூசணிக்காய், பரங்கிக்காய்
Radio வானொலி
Radish முள்ளங்கி
Raisin உலர் திராட்சை, உலர் கொடிமுந்திரி
Red Banana செவ்வாழைப்பழம்
Red currant செந்திராட்சை
Registrar பதிவாளர்
Ridged gourd பீர்க்கங்காய்
Router திசைவி
SIM Card செறிவட்டை
SMS (Short Message Service) குறுஞ்செய்தி
Satellite செயற்கைக்கோள்
Science அறிவியல்
Search engine தேடுபொறி
Selfie தம்படம்
Skype காயலை
Smartphone திறன்பேசி
Snake Gourd புடலங்காய்
Social Networking சமூக வலைதளம்
Software மென்பொருள்
Spinach பசலைக்கீரை, முளைக்கீரை
Spring onion வெங்காயத்தாள்
Strawberry செம்புற்றுப்பழம்
Sweet Potato சர்க்கரைவள்ளிக் கிழங்கு
Tamarillo குறுந்தக்காளி
Tamarind புளி
Tangerine தேனரந்தம்பழம்
Tapioca மரவள்ளிக்கிழங்கு
Technology தொழில்நுட்பம்
Telephone தொலைபேசி
Text Editor உரைத்தொகுப்பான்
Text-to-voice உரை-ஒலி
Thumbdrive விரலி
Tomato தக்காளி
Touch screen தொடுதிரை
Translation மொழிபெயர்ப்பு
Transliteration ஒலிபெயர்ப்பு
Turmeric மஞ்சள்
Twitter கீச்சகம்
URL (Universal Resource Locator) உரலி
Ugli fruit முரட்டுத் தோடை
Upload பதிவேற்றம்
WWW (World Wide Web) உலகளாவிய வலைப்பின்னல்
Watermelon தர்பூசணி, குமட்டிப்பழம்
WeChat அளாவி
Web வலை
Website இணையதளம்
WhatApp புலனம்
WiFi அருகலை
Wood apple விளாம்பழம்
YouTube வலையொளி
car மகிழூந்து
peppermint leaves புதினா
zoology விலங்கியல்
பிறமொழிச் சொற்கள் தூய தமிழ்ச் சொற்கள்
No result
பிரச்சாரம் பரப்புரை
நமஸ்காரம் வணக்கம்
அபிஷேகம் திருமுழுக்கு
ஆஸ்தி சொத்து
உத்தியோகம் அலுவல்
உத்தியோகஸ்தர் அலுவலர்
ஆசிர்வாதம் வாழ்த்து
கோஷ்டி கூட்டம்
குமாஸ்தா எழுத்தர்
பஜார் கடைத்தெரு
சர்க்கார் அரசு
ஜனங்கள் மக்கள்
ஜில்லா மாவட்டம்
கஜானா கருவூலம்
அமுல் நடைமுறை
மாமூல் வழக்கம்
ரத்து நீக்கம்
சம்பிரதாயம் மரபு
உபந்நியாசம் பேருரை
சங்கீதம் உபந்நியாசம் இசைப் பேருரை
பஜனை கூட்டுவழிபாடு
கும்பாபிஷேகம் குடமுழுக்கு
சுத்தம் தூய்மை
சந்தோஷம் மகிழ்ச்சி
சரித்திரம் வரலாறு
நிம்மதி நிறைவு
கஷ்டம் துன்பம்
பேப்பர் தாள்
இஷ்டம் விருப்பம்
நஷ்டம் இழப்பு
கர்ப்பஸ்திரீ கருவுற்ற பெண்
சம்பாஷனை உரையாடல்
கர்ப்பக்கிரகம் கருவறை
தாலுக்கா ஆபீஸ் வட்டாட்சியர் அலுவலகம்
ஆபீஸ் அலுவலகம்
டிபன் சிற்றுண்டி
விவசாயம் வேளாண்மை
ஆஸ்பத்திரி மருத்துவமனை
டாக்டர் மருத்துவர்
விபூதி திருநீறு
விஷயம் செய்தி
சேவை தொண்டு
ஜாக்கிரதை விழிப்புணர்வு
பேட்டி நேர்காணல்
அனுபவம் பட்டறிவு (பட்டு பெறும் அறிவு)
நிபுணர் வல்லுநர்
அட்மிஷன் சேர்க்கை
ஜுரம் காய்ச்சல்
ஜலதோஷம் சளி
பந்த் முழு அடைப்பு
கிரஹப்பிரவேசம் புதுமனைப் புகுவிழா
கல்யாணம் திருமணம்
சூரியன் கதிரவன்
சந்திரன் நிலவு, திங்கள்
வாயு காற்று, வளி
மைதானம் திடல்
செளக்கியம் நலம்
லட்சியம் குறிக்கோள்
வருஷம் ஆண்டு
ராஜா அரசன்
ராணி அரசி
யோகம் நற்பொழுது
அதிஷ்டம் நற்பலன்
தினம் நாள்
ஜென்மம் பிறப்பு
நிச்சயம் உறுதி
பயம் அச்சம்
ஜெயம் வெற்றி
விஜயம் வருகை
அகங்காரம் செருக்கு
அபிப்பிராயம் கருத்து
தைரியம் துணிவு
தினசரி நாள்தோறும்
சபதம் சூளுரை
ஆனந்தம் மகிழ்ச்சி
அபூர்வம் அரிது
ஆராதனை வழிபாடு
அலமாரி நெடும்பேழை
கிராம்பு இலவங்கம்
சாவி திறவுகோல்
ஜன்னல் சாளரம்
தகவல் செய்தி
வக்கீல் வழக்குரைஞர்
பாக்கி நிலுவை
மிட்டாய் தீங்கட்டி (தீம் + கட்டி; தீம் - இனிப்பு)
காகிதம் தாள்
பேட்டை புறநகர்
அபாண்டம் வீண்பழி
அட்டவணை பட்டியல்
ஜாடை செய்கை
யுத்தம் போர்
சம்பவம் நிகழ்வு
யோசனை சிந்தனை
யோக்கியன் நல்லவன்
அயோக்கியன் தீயவன்/ கெட்டவன்
பெருமிதம்