தமிழ் உலகம்

தினம் ஒரு குறள்

நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம் வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு.

குடிமை (குறள் எண்: 960)

பொருளுரை:
ஒருவனுக்கு நன்மை வேண்டுமானால் நாணம் உடையவனாக வேண்டும்; குடியின் உயர்வு வேண்டுமானால் எல்லோரிடத்தும் பணிவு வேண்டும்.
உறுப்பினர் பகுதி

நாக்கில் இருக்கிறது நன்மையும் தீமையும்.

இது ஒரு விடுகதை. "பந்திக்கு முந்துவான், படைக்குப் பிந்துவான்............யார்?". இதன் விடை: கை.
பந்தியில் உணவு உண்ணுவதற்கு கை உடலின் முன்புறம் செல்கிறது. படை கொண்டு போரில் ஈடுபடும் பொழுது ஆயுதத்தை ஏந்தும் கை ஓங்குவதற்காகப் பின்புறம் செல்கிறது.

பொறுத்தார் பூமி ஆள்வார்.

போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.

மண் (குதிர் + ஐ) நம்பி ஆற்றில் இறங்கலாமா?

குதிர் - மணல் மேடு (ஆற்றில் தெரியும் மணல் மேடு)

ஆற்றில், மணல் மேடு போல் தெரியும் குவியல் நம்மை தாங்கும் என்று நம்பி ஆற்றில் இறங்காதே. அத்தகைய குவியல் கால் வைத்தவுடன் உள்வாங்கி ஒருவரை ஆற்றில் மூழ்கச்செய்து விடக் கூடும்.

மதியார் வாசலை மிதியாதே.

மனமிருந்தால் மார்க்கம் உண்டு.

மனம் போல வாழ்வு.

மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது.

விரை ஒன்று போடச் சுரை ஒன்று முளைக்குமா?

விளையும் பயிர் முளையிலே தெரியும்.