தினம் ஒரு குறள்

வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்
நுண்ணவை அஞ்சு பவர்க்கு.

அவையஞ்சாமை (குறள் எண்: 726)

பொருளுரை:
அஞ்சாத வீரர் அல்லாத மற்றவர்க்கு வாளோடு என்ன தொடர்பு உண்டு? நுண்ணறிவுடையவரின் அவைக்கு அஞ்சுகின்றவர்க்கு நூலோடு என்ன தொடர்பு உண்டு?
உறுப்பினர் பகுதி
 

ஔவையார் இயற்றிய ஆத்திச்சூடியும் கொன்றைவேந்தனும், சிறு சொற்றொடர்களால் அமைக்கப்பெற்ற நன்நெறி நூலாகும். பல பெரிய நூல்களின் சாரமாகவுள்ள அறங்களை, சிறு பிள்ளைகளும் எளிதாய் நினைவில் வைத்துக் கொள்ளும்படி எளிமையான மிகச்சிறிய சொற்றொடர்களால் தெளிவாக அமைக்கப்பெற்றுள்ளது. ஆத்திச்சூடி 2 சீர்களாலும் கொன்றைவேந்தன் 4 சீர்களாலும் அமையப்பெற்றுள்ளது. இதில், அகர வரிசைப்படி எழுத்துகளை முதலில் உடையனவாக, மிக  இளம்பருவத்திலேயே பிள்ளைகளின் மனத்தில் உயர்ந்த நீதிகளைப் பதியவைக்க வேண்டுமென்னும் அருங் கருத்துடனும் பெரும் நோக்கத்துடனும் ஆக்கப்பெற்றுள்ளது ஆத்திசூடியின் சிறப்பு. 

 

தமிழ் இலக்கிய வரலாற்றில் ஔவையார் என்ற பெயரில் பல பெண் புலவர்கள் இருந்ததாகத் தெரிகிறது. ஔவையார் எழுதியதாக கிடைத்த பாடல்களை, அவற்றின் காலம், பாடல்களின் சொல்லாடல் மற்றும் கருத்துகளைக் கொண்டு ஔவையார் என்ற பெயரில் 4 புலவர்கள் வாழ்ந்துள்ளதாக வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

முதலாவதாக வாழ்ந்தவர் சங்ககால ஔவையார். இவர் சங்க இலக்கியங்களில் மொத்தம் 59 பாடல்களை இயற்றியுள்ளார்; அவை, புறநானூறு (33 பாடல்கள்), குறுந்தொகை (15 பாடல்கல்), நற்றிணை (7 பாடல்கள்), அ்கநானூறு (4 பாடல்கள்). இவர் அதியாமானுடன் மிகுந்த நட்பு கொண்டவர். இவர் அதியமான் நெடுமான் அஞ்சி, அதியமானின் மகன் பொகுட்டெழினி, சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, பாண்டியன் கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி, சேரமான் மாவெங்கோ ஆகிய மன்னர்களைப் பாடியுள்ளார்.

பக்திக்கால இறுதியில் விநாயகர் அகவலைப் பாடியவர் இரண்டாவது ஔவையார் .

ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி போன்ற நீதி நூல்களைப் பாடியவர் மூன்றாவது ஔவையார்.

தனிப்பாடல்களையும், முருகன் மீதான பக்திப் பாடல்களை யும் மிகுதியாகப் பாடியவர், இன்று நாம் பாட்டியாக வரைந்து போற்றி வணங்கும் ஒவ்வையார் இவரே.

ஆத்தி சூடி யமர்ந்த தேவனை

ஏத்தி யேத்தித் தொழுவோ மியாமே

ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே

பதவுரை:

ஆத்தி – திருவாத்தி மலர்

சூடியமர்ந்த (சூடி + அமர்ந்த): சூடி - சூடியவராகிய சிவபெருமான்; அமர்ந்த - விரும்பிய

தேவனை - விநாயகக் கடவுளை

ஏத்தி யேத்தி (ஏத்தி + ஏத்தி) - வாழ்த்தி வாழ்த்தி

தொழுவோ மியாமே (தொழுவோம் + யாமே): தொழுவோம் - வணங்குவோம்; யாமே – நாமே

பொருளுரை:

      ஆத்தி மலர்களை சூடிய சிவபெருமான் விரும்பும் விநாயகக் கடவுளை நாம் எப்போதும் துதித்து வணங்குவோம்.

குறிப்பு:

ஆத்தி – ஓர் மரம். இதில் இரண்டு வகைகள் உண்டு.

1. காட்டாத்தி (Bauhinia parviflora)

2. திருவாத்தி (Bauhinia tomentosa), மருத்துவ குணங்கள் மிக்கதும், சிவபெருமானுக்கு உகந்ததும் ஆகும்.

 

திருவாத்தி மலர்

 
உயிர் வருக்கம்

றஞ்செய விரும்பு

றம் செய விரும்பு 

 

பதவுரை:

அறம் – தருமம்
செய - செய்ய
விரும்பு - விருப்பம் கொள்

பொருளுரை:

          தருமம் செய்ய விருப்பம் கொள்.

 

றுவது சினம்

ஆறுவது சினம்

பதவுரை:

ஆறுவது தணிய கூடியது

சினம் - கோபம்

பொருளுரை:

       கோபம் தணியக் கூடியது; தணிக்க வேண்டியது.

 

யல்வது கரவேல்

இயல்வது கரவேல்

பதவுரை:

இயல்வது - இயல்வதை (கொடுக்க இயல்வதை)

கரவேல் - மறைக்காதே (கரத்தல் - மறைத்தல், வழங்காமல் இருத்தல்)

பொருளுரை:

        கொடுக்க இயல்வதை இரப்பவர்க்கு மறைக்காமல் கொடு.

 

வது விலக்கேல்

ஈவது விலக்கேல்

பதவுரை:

ஈவது - கொடுப்பது

விலக்கேல் - விலக்குதல் வேண்டாம்

பொருளுரை:

          மற்றவர்க்கு கொடுக்கும் எண்ணத்தை மனதை விட்டு விலக்காதே.

 

டையது விளம்பேல்

உடையது விளம்பேல்

பதவுரை:

உடையது - உடைமைகளை

விளம்பேல் - கூறாதே (விளம்பு - கூறு)

பொருளுரை:

          உன்னுடைய செல்வங்களையும், சிறப்பையும் நீயே புகழ்ந்து பேசாதே.

 

க்கமது கைவிடேல்

ஊக்கமது கைவிடேல்

பதவுரை:

ஊக்கமது (ஊக்கம் + அது): ஊக்கம் ஈடுபாடு, ஆர்வம்; (அது - பகுதிப்பொருள் விகுதி)

கைவிடேல் கைவிடாதே

பொருளுரை:

          நீ செய்யும் செயலில் உனக்கு உள்ள ஈடுபாட்டை கைவிடாதே.

 

ண்ணெழுத் திகழேல்

எண் எழுத்து இகழேல்

பதவுரை:

எண் – கணிதம்
எழுத்து - மொழி இலக்கணம்
இகழேல் - இகழ்ந்து ஒதுக்காதே

பொருளுரை:

        கணிதத்தையும், மொழி இலக்கணத்தையும் இகழ்ந்து ஒதுக்காமல் கற்க வேண்டும்.

 

ற்ப திகழ்ச்சி

ஏற்பது இகழ்ச்சி

பதவுரை:

ஏற்பது - இரந்து நிற்பது (ஏல் - இரத்தல், பிச்சை கேட்பது)

இகழ்ச்சி - இழிவானது

பொருளுரை:

        பிறரிடம் ஒன்றை வேண்டி இரத்தல் இழிவானது.

 

ய மிட்டுண்

ஐயம் இட்டு உண்

பதவுரை:

ஐயம் – பிச்சை
இட்டு – கொடுத்து
உண் - உணவு உண்

பொருளுரை:

        இரப்பவர்க்குப் பிச்சையிட்ட பின் நீ உணவு உண்.

 

ப்புர வொழுகு

ஒப்புரவு ஒழுகு

பதவுரை:

ஒப்புரவு - உலக நடை அறிந்து 

ஒழுகு - நட

பொருளுரை:

        உலகத்தோடு பொருந்துமாறு நடந்துகொள்.

 

துவ தொழியேல்

ஓதுவது ஒழியேல்

பதவுரை:

ஓதுவது – கற்பது 

ஒழியேல் - விடாதே.

பொருளுரை:

        கற்பதை நிறுத்தி விடாதே.

 

ஒளவியம் பேசேல்

ஒளவியம் பேசேல்

பதவுரை:

ஒளவியம் - பொறாமை வார்த்தைகள்

பேசேல் - பேசாதே.

பொருளுரை:

        ஒருவரிடத்தும் பொறாமைகொண்டு பேசாதே.

 

அஃகஞ் சுருக்கேல்

அஃகம் சுருக்கேல்

பதவுரை:

அஃகம் – தானியம், விலைப்பொருள்

சுருக்கேல் - சுருக்காதே, குறைக்காதே.

பொருளுரை:

        பண ஆசை கொண்டு தானியங்களைக் குறைத்து அளந்து விற்காதே.

 
உயிர்மெய் வருக்கம்

ண்டொன்று சொல்லேல்

          கண்டு ஒன்று சொல்லேல்

பதவுரை:

கண்டு - (ஒன்றை) கண்டு 

ஒன்று – வேறொன்றை 

சொல்லேல் - சொல்லாதே

பொருளுரை:

     கண்ணால் கண்டதற்கு மாறாகச் சொல்லாதே. (பொய்ச்சாட்சி சொல்லாதே)

 

ப்போல் வளை

ஙப்போல் வளை

பதவுரை:

ஙப்போல் – ஙகரம்போல்

வளை - வளைந்து கொடு

பொருளுரை:

இதற்கு இரண்டு வகையாகப் பொருள் கூறுவர்,

1)    ஙகர எழுத்தான 'ங்' அனைத்து எழுத்துக்களோடும் இணையும் தன்மை கொண்டதுபோல் உற்றார் உறவினர்களுக்கு வளைந்து கொடு.

2)    ‘ங்’ என்னும் எழுத்தானது தான் பயனுடையதாயிருந்து தன் வருக்க எழுத்துகளைத் தழுவிக் கொள்ளுதல் போல (ஙா முதலிய மற்ற பதினொரெழுத்தும் எந்தச் சொல்லிலும் வருவதில்லை), நாமும் நம்மைச் சார்ந்தவர்களால் என்ன பயன் என்று பாராமல் அவர்களைக் காக்க வேண்டும்.

 

 னிநீ ராடு

சனி நீராடு

பதவுரை:

சனி - சனிக்கிழமைதோறும் 

நீராடு - (எண்ணெய் தேய்த்து) நீரிலே தலைமுழுகு

பொருளுரை:

சனிக்கிழமைதோறும் எண்ணெய் தேய்த்து தலைமுழுகு.

 

யம்பட வுரை

ஞயம்பட உரை

பதவுரை:

ஞயம் - நயம் என்பதன் போலி (நயம் - இனிமை) 

பட – தோன்றும்படி

உரை - பேசு

பொருளுரை:

          கேட்பவர்களுக்கு இன்பம் தோன்றும்படி இனிமையாக பேசு.

 

ம்பட வீடெடேல்

இடம்பட வீடு எடேல்

பதவுரை:

இடம்பட – பெரியதாக

வீடு – வீட்டை 

எடேல் - கட்டாதே (எடுத்தல் - எழுப்புதல்)

பொருளுரை:

          அளவுக்குமேல் பெரிதாக வீட்டை கட்டாதே. ''சிறுகக் கட்டிப் பெருக வாழ்'' என்பது பழமொழி.

 

க்கமறிந் திணங்கு

இணக்கம் அறிந்து இணங்கு

பதவுரை:

இணக்கம் - நட்பு
அறிந்து – ஆராய்ந்தறிந்து
இணங்கு - நட்பு கொள்

பொருளுரை:

நட்புக்கு உரிய நற்குணம் உடையவரை அறிந்து, தேர்ந்து நட்பு கொள்.

 

ந்தைதாய்ப் பேண்

தந்தைதாய்ப் பேண்

பதவுரை:

தந்தை தாய் – தந்தையையும் தாயையும்

பேண் - காப்பாற்று

பொருளுரை:

          உன் தாய் தந்தையரை அன்புடன் போற்றிக் காப்பாற்று.

 

ன்றி மறவேல்

நன்றி மறவேல்

பதவுரை:

நன்றி - உதவி (பிறர் செய்த உதவி)

மறவேல் - மறவாதே

பொருளுரை:

          உனக்குப் பிறர் செய்த நன்மையை எப்பொழுதும் மறவாதே.
          நன்றி மறந்து உனக்கு உதவி செய்தவர்க்கு ஒருபொழுதும் தீமை செய்துவிடாதே.

 

ருவத்தே பயிர்செய்

பருவத்தே பயிர்செய்

பதவுரை:

பருவத்தே - தக்க காலத்தில் 

பயிர்செய் - பயிரிடு.

பொருளுரை:

          விளையும் பருவமறிந்து பயிரிடு. 
           எச்செயலும் அதற்குரிய காலத்திலே செய்யப்படவேண்டும்.

 

ண்பறித் துண்ணேல்

மண் பறித்து உண்ணேல்

பதவுரை:

மண் - நிலம்

பறித்து – மற்றவரிடமிருந்து பறித்து 

உண்ணேல் - உண்டு வாழாதே

பொருளுரை:

          பிறர் நிலத்தை எமாற்றிப் பறித்து பொருள் ஈட்டி வாழாதே.

 

ல்பலா தனசெயேல்

இயல்பு அலாதன செயேல்

பதவுரை:

இயல்பு - நல் இயல்பு 

அலாதன - அல்லாத, மாறான (செயல்களை)

செயேல் - செய்யாதே

பொருளுரை:

          நல்லொழுக்கத்திற்கு மாறான செயல்களைச் செய்யாதே.

 

வ மாட்டேல்

அரவம் ஆட்டேல்

பதவுரை:

அரவம் - பாம்புடன் (அரவம் - பாம்பு)
ஆட்டேல் - விளையாடாதே

பொருளுரை:

          பாம்புடன் விளையாடாதே; ஆபத்தானது.

 

வம்பஞ்சிற் றுயில்

இலவம் பஞ்சில் துயில்

பதவுரை:

இலவம்பஞ்சில் - இலவம்பஞ்சு மெத்தையில்

துயில் - உறங்கு

பொருளுரை:

          இலவம்பஞ்சினால் செய்த மெத்தையில் படுத்து உறங்கு.

 

ஞ்சகம் பேசேல்

வஞ்சகம் பேசேல்

பதவுரை:

வஞ்சகம் - ஏமாற்றும் சொற்களை
பேசேல் - பேசாதே

பொருளுரை:

பிறரை ஏமாற்றும்படி பேசாதே. 

 

கலா தனசெயேல்

அழகு அலாதன செயேல்

பதவுரை:

அழகு அலாதன - சிறப்பில்லாத செயல்களை, இழிவன செயல்களை

செயேல் - செய்யாதே.

பொருளுரை:

இழிவான செயல்களைச் செய்யாதே.

 

மையிற் கல்

இளமையில் கல்

பதவுரை:

இளமையில் - இளமைப் பருவத்திலே

கல் - கல்வியைக் கற்றுக்கொள்.

பொருளுரை:

இளமைப் பருவத்திலேயே கற்கத் தொடங்கு.

 

னை மறவேல்

அறனை மறவேல்

பதவுரை:

அறனை - தருமத்தை

மறவேல் - மறவாதே.

பொருளுரை:

தருமத்தை எப்பொழுதும் மறவாமல் செய்.

 

ந்த லாடேல்

அனந்தல் ஆடேல்

பதவுரை:

அனந்தல் - தூக்கம்

ஆடேல் - மிகுதியாகக் கொள்ளாதே

பொருளுரை:

மிகுதியாகத் தூங்காதே.

 
ககர வருக்கம்

டிவது மற

கடிவது மற

பதவுரை:

கடிவது - சினத்தல், கோபித்தல்
மற - மறந்துவிடு

பொருளுரை:

யாரையும் சினந்து கடிந்துகொள்ளாதே.

 

காப்பது விரதம்

காப்பது விரதம்

பதவுரை:

காப்பது - காப்பாற்றுவதே

விரதம் - நோன்பு

பொருளுரை:

செய்யும் செயலை உறுதியுடன் விடாமல் செய்வதே விரதம்.

 

கிழமைப் படவாழ்

கிழமைப்பட வாழ்

பதவுரை:

கிழமை - உறவு, உரிமை

வாழ் - வாழ்க

பொருளுரை:

உறவுகள் சூழ வாழ்.

உடலாலும் பொருளாலும் பிறருக்கு உரிமையாகும்படி நன்மை செய்து வாழ்.
( அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
  என்பும் உரியர் பிறர்க்கு.
                                                - திருக்குறள்)

 

கீழ்மை யகற்று

கீழ்மை அகற்று

பதவுரை:

கீழ்மை - இழிவானவற்றை 

அகற்று - நீக்கு

பொருளுரை:

உனது இழிவான குணங்களையும் செயல்களையும் நீக்கு.

 

குணமது கைவிடேல்

குணமது கைவிடேல்

பதவுரை:

குணமது – (நல்ல) குணங்களை

கைவிடேல் - கைவிடாதே.

பொருளுரை:

நற்குணங்களைக் கைவிடாதே!

 

கூடிப் பிரியேல்

கூடிப் பிரியேல்

பதவுரை:

கூடி - நட்புக்கொண்டு (நல்லவரோடு)

பிரியேல் - பிரியாதே

பொருளுரை:

நல்லவரோடு நட்பு கொண்டு பின் அவரை விட்டுப் பிரியாதே.

 

கெடுப்ப தொழி

கெடுப்பது ஒழி

பதவுரை:

கெடுப்பது - பிறருக்குக் கேடு செய்வதை

ஒழி - விட்டு விடு

பொருளுரை:

பிறருக்குக் கெடுதல் செய்வதை விட்டுவிடு.

பிறருக்குக் கேடு விளைக்கும் செயல்களைச் செய்யாதே.

 

கேள்வி முயல்

கேள்வி முயல்

பதவுரை:

கேள்வி - கேட்பதற்கு (கற்றவர் சொற்களை)

முயல் - முயற்சி செய்

பொருளுரை:

கற்றறிந்தவர்கள் சொல்லும் உயர்ந்த கருத்துக்களைக் கேட்க முயற்சி செய்.

 

கைவினை கரவேல்

கைவினை கரவேல்

பதவுரை:

கைவினை - கைத் தொழில்

கரவேல் - ஒளியாதே, மறைக்காதே (கரத்தல் - மறைத்தல்)

பொருளுரை:

உனக்குத் தெரிந்த கைத்தொழிலை மற்றவர்களுக்கு மறைக்காமல் கற்றுக்கொடு.

 

கொள்ளை விரும்பேல்

கொள்ளை விரும்பேல்

பதவுரை:

கொள்ளை - கொள்ளையிடுதற்கு

விரும்பேல் - விரும்பாதே

பொருளுரை:

பிறர் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்பாதே.

 

கோதாட் டொழி.

கோது ஆட்டு ஒழி

பதவுரை:

கோது - குற்றம் பொருந்திய 

ஆட்டு - விளையாட்டை 

ஒழி - நீக்கு

பொருளுரை:

குற்றமான விளையாட்டை விட்டுவிடு.

 

 

கெளவை அகற்று

கெளவை அகற்று

பதவுரை:

கெளவை - கவ்வை - துன்பம், கவலை
அகற்று - நீக்கு

பொருளுரை:

பிறர் துன்பத்தை அகற்று.

 
சகர வருக்கம்

க்கர நெறிநில்

சக்கர நெறிநில்

பதவுரை:

சக்கரநெறி – (அரசனது ஆணையாகிய) சக்கரம் செல்லும் வழியிலே

நில் – அடங்கி யிரு

பொருளுரை:

அரசன் கட்டளை வழியில் அடங்கி நட.

 

சான்றோ ரினத்திரு

சான்றோர் இனத்து இரு

பதவுரை:

சான்றோர் – அறிவினால் நிறைந்தவர்களுடைய

இனத்து – கூட்டத்திலே

இரு – எந்நாளும் இரு.

பொருளுரை:

அறிவொழுக்கங்கள் நிறைந்த பெரியோர்களின் கூட்டத்தைச் சேர்ந்திரு.

 

சித்திரம் பேசேல்

சித்திரம் பேசேல்

பதவுரை:

சித்திரம் - பொய், அலங்காரம் 

பேசேல் - பேசாதே

பொருளுரை:

பொய் வார்த்தைகளைப் பேசாதே.

பொய்யான அலங்கார வார்த்தைகளைப் பேசாதே.

 

சீர்மை மறவேல்

சீர்மை மறவேல்

பதவுரை:

சீர்மை - புகழுக்கு ஏதுவாகிய குணத்தை

மறவேல் - மறந்துவிடாதே

பொருளுரை:

புகழுக்குக் காரணமானவற்றை மறந்துவிடாதே.

உன் புகழுக்குப் பொருத்தமான குணங்களை மறந்துவிடாதே.

 

சுளிக்கச் சொல்லேல்

சுளிக்கச் சொல்லேல்

பதவுரை:

சுளிக்க - (கேட்பவர்) வெறுக்கும்படியாக (சுளித்தல் - வெறுத்தல், சினத்தல்)

சொல்லேல் - பேசாதே.

பொருளுரை:

கேட்பவர்க்குக் கோபமும் வெறுப்பும் உண்டாகும்படி பேசாதே.

 

சூது விரும்பேல்

சூது விரும்பேல்

பதவுரை:

சூது - சூதாட்டம், சூழ்ச்சி
விரும்பேல் - விரும்பாதே

பொருளுரை:

ஒருபொழுதும் சூதாட்டத்தை விரும்பாதே.

சூழ்ச்சி செய்வதை விரும்பாதே.

 

செய்வன திருந்தச்செய்

செய்வன திருந்தச்செய்

பதவுரை:

செய்வன - செய்யும் செயல்களை
திருந்த - திருத்தமாக, செம்மையாக
செய் - செய்

பொருளுரை:

செய்யும் செயல்களைத் திருத்தமாகச் செய்.

 

சேரிடமறிந்து சேர்

சேர் இடம் அறிந்து சேர்

பதவுரை:

சேர் இடம் - சேரத்தகுந்த இடம்

அறிந்து - தெரிந்து

சேர் - சேர்

பொருளுரை:

சேரத்தக்க நல்லிடத்தை ஆராய்ந்தறிந்து சேர்.

 

சையெனத் திரியேல்

சை எனத் திரியேல்

பதவுரை:

சை என - சீ என்னும்படி (சை - சீ)
திரியேல் - திரியாதே, நடந்து கொள்ளாதே

பொருளுரை:

பிறர் உன்னை சீ என்று வெறுக்கும்படி நடந்து கொள்ளாதே.

 

சொற்சோர்வு படேல்

சொல் சோர்வு படேல்

பதவுரை:

சொல் - பேசும் சொற்களில்

சோர்வு படேல் - தெளிவின்றிப் பேசாதே

பொருளுரை:

பிறருடன் பேசும்பொழுதும் தெளிவின்றிப் பேசாதே.

 

சோம்பித் திரியேல்

சோம்பித் திரியேல்

பதவுரை:

சோம்பி - (முயற்சியைச் செய்யாமல்) சோம்பல்கொண்டு

திரியேல் - திரியாதே, நடந்து கொள்ளாதே

பொருளுரை:

முயற்சியின்றிச் சோம்பேறியாகத் திரியாதே.

 
தகர வருக்கம்

க்கோ னெனத்திரி

தக்கோன் எனத் திரி

பதவுரை:

தக்கோன் - தக்கவன் (தகுந்தவன், நம்பத்தகுந்தவன்)

என - என்று 

திரி - நடந்துகொள்.

பொருளுரை:

பெரியோர்கள் உன்னைத் தக்கவன் என்று புகழும்படி நடந்துகொள்.

 

தானமது விரும்பு

தானம் அது விரும்பு

பதவுரை:

தானம் அது - தானம் செய்தலை (அது - பகுதிப்பொருள் விகுதி)
விரும்பு - விரும்பு

பொருளுரை:

தக்கவர்களுக்குத் தானம் கொடுத்தலை விரும்பிச் செய்.

 

திருமாலுக் கடிமை செய்

திருமாலுக்கு அடிமை செய்

பதவுரை:

திருமாலுக்கு - திருமாலுக்கு

அடிமைசெய் - தொண்டுசெய்

பொருளுரை:

திருமாலுக்குத் தொண்டு செய்.

 

தீவினை யகற்று

தீவினை கற்று

பதவுரை:

தீவினை - தீய செயல்களை

அகற்று - நீக்கு, விலக்கு

பொருளுரை:

தீய செயல்களைச் செய்யாமல் விலக்கு

 

துன்பத்திற் கிடங்கொடேல்

துன்பத்திற்கு இடம் கொடேல்

பதவுரை:

துன்பத்திற்கு - வருத்தத்திற்கு

இடங்கொடேல் - கொடுக்காதே

பொருளுரை:

துன்பத்திற்குச் சிறிதும் கொடுக்காதே.

 

தூக்கி வினைசெய்

தூக்கி வினை செய்

பதவுரை:

தூக்கி - சீர்தூக்கி, ஆராய்ந்து
வினை - ஒரு செயலை
செய் - செய்க

பொருளுரை:

முடிக்கும் வழியை ஆராய்ந்து ஒரு செயலைச் செய்க.

 

தெய்வ மிகழேல்

தெய்வம் இகழேல்

பதவுரை:

தெய்வம் - கடவுளை

இகழேல் - பழிக்காதே

பொருளுரை:

கடவுளை இகழ்ந்து பேசாதே

 

தேசத்தோ டொத்துவாழ்

தேசத்தோடு ஒத்துவாழ்

பதவுரை:

தேசத்தோடு - நீ வசிக்கும் தேசத்தில் உள்ளவர்களுடன்

ஒத்து - ஒருங்கிணைந்து

வாழ் - வாழ்

பொருளுரை:

நீ வாழும் தேசத்தவருடன் பொருந்தி ஒற்றுமையுடன் வாழ்.

 

தையல்சொல் கேளேல்

தையல்சொல் கேளேல்

பதவுரை:

தையல் - புனையப்படுதல்
சொல் - சொற்களை
கேளேல் - கேட்டு நடக்காதே

பொருளுரை:

புனையப்படும் சொற்களை உண்மை என நம்பி நடக்காதே.

குறிப்பு:

தையல் என்னும் சொல்லுக்கு மனைவி என்ற பொருளும் உண்டு. அதன்படி, மனைவியின் சொல் கேட்டு நடக்காதே என்று பொருள் கூறுவோர் உண்டு. தையல் என்ற சொல்லுக்கு புனையப்படுதல் என்ற பொருளே இங்கு பொருந்தும்.

 

தொன்மை மறவேல்

தொன்மை மறவேல்

பதவுரை:

தொன்மை - பழமையை

மறவேல் - மறவாதே

பொருளுரை:

பழைய வாழ்வை/நிலையை மறவாதே.

 

தோற்பன தொடரேல்

தோற்பன தொடரேல்

பதவுரை:

தோற்பன - தோல்வியில் முடியும் செயலை

தொடரேல் - தொடராதே, ஈடுபடாதே

பொருளுரை:

தோல்வியில் முடியும் செயலில் தொடராதே.

 
நகர வருக்கம்

ன்மை கடைப்பிடி

நன்மை கடைப்பிடி

பதவுரை:

நன்மை - நன்மை செய்வதை

கடைபிடி - உறுதியாகப் பிடி, பின்பற்று

 

பொருளுரை:

பிறருக்கு நன்மை செய்வதை உறுதியாகப் பின்பற்று

 

நாடொப் பனசெய்

நாடு ஒப்பன செய்

பதவுரை:

நாடு - நாட்டில் உள்ளோர்
ஒப்பன - ஒப்பும், ஒப்புக்கொள்ளும் செயல்களை
செய் - செய்க

பொருளுரை:

நாட்டிலுள்ளோர் ஒப்புக்கொள்ளக்கூடிய நல்ல செயல்களைச் செய்.

 

நிலையிற் பிரியேல்

நிலையில் பிரியேல்

பதவுரை:

நிலையில் - நிலை விட்டு (உயர்ந்த குணம் நிலை)
பிரியேல் - பிரியாதே, விலகாதே

பொருளுரை:

உன் உயர்ந்த குணங்களை இழந்து விடாதே.

 

நீர்விளை யாடேல்

நீர் விளையாடேல்

பதவுரை:

நீர் - வெள்ள நீரில்

விளையாடேல் - விளையாடாதே

பொருளுரை:

வெள்ள நீரில் விளையாடாதே

 

நுண்மை நுகரேல்

நுண்மை நுகரேல்

பதவுரை:

நுண்மை - மிகுதி
நுகரேல் - நுகராதே, உண்ணாதே

பொருளுரை:

மிகுதியாக உணவு உண்ணாதே

 

நூல்பல கல்

நூல் பல கல்

பதவுரை:

நூல் - நூல்கள் (அறிவு வளர்க்கும் நூல்கள்)
பல - பலவற்றையும்
கல் - கற்றுக்கொள்

பொருளுரை:

அறிவு வளர்க்கும் நூல்கள் பலவற்றையும் கற்றுக்கொள்.

 

நெற்பயிர் விளை

நெற்பயிர் விளை

பதவுரை:

நெற்பயிர் - நெற்பயிரை
விளை - விளைவித்திடு

பொருளுரை:

நெற்பயிரை விளையச்செய்; உழுதுண்டு வாழ்.

 

நேர்பட வொழுகு

நேர்பட ஒழுகு

பதவுரை:

நேர்பட - ஒழுக்கத்தின் வழியில்
ஒழுகு - நடந்துகொள்

பொருளுரை:

ஒழுக்கத்தின் வழியில் நடந்துகொள்.

 

நைவினை நணுகேல்

நைவினை நணுகேல்

பதவுரை:

நை - கேடு, கெடும்படியான
வினை - செயல்கள்
நணுகேல் - சாராதே, செய்யாதே

பொருளுரை:

கேடு தரும் செயல்களைச் செய்யாதே

 

நொய்ய வுரையேல்

நொய்ய உரையேல்

பதவுரை:

நொய்ய - பயனற்றவை
உரையேல் - உரைக்காதே, பேசாதே

பொருளுரை:

பயனற்ற வார்த்தைகளைப் பேசாதே

 

நோய்க்கிடங் கொடேல்

நோய்க்கு இடங்கொடேல்

பதவுரை:

நோய்க்கு - நோய்களுக்கு
இடங்கொடேல் - இடங்கொடுக்காதே

பொருளுரை:

நோய்களுக்கு இடங்கொடுக்காதவாறு தூய்மையைக் கடைபிடி.

 
பகர வருக்கம்

ழிப்பன பகரேல்

பழிப்பன பகரேல்

பதவுரை:

பழிப்பன - (பெரியோர்களால்) பழிக்கப்படுவதை

பகரேல் - பேசாதே

பொருளுரை:

பெரியோர்களால் பழிக்கப்படும் சொற்களைப் பேசாதே.

 

பாம்பொடு பழகேல்

பாம்பொடு பழகேல்

பதவுரை:

பாம்பொடு - பாம்பைப் போன்ற (பால் கொடுத்தவர்க்கும் நஞ்சைக் கக்கும்) மனிதர்களிடம்

பழகேல் - பழகாதே

பொருளுரை:

பாம்பைப் போன்ற குணம் கொண்ட கொடிய மனிதர்களிடம் பழகாதே

 

பிழைபடச் சொல்லேல்

பிழைபடச் சொல்லேல்

பதவுரை:

பிழைபட - பிழை/குற்றம் உண்டாகும்படி

சொல்லேல் - பேசாதே

பொருளுரை:

குற்றம் உண்டாகும்படி பேசாதே

 

பீடு பெறநில்

பீடுபெற நில்

பதவுரை:

பீடு - பெருமை
பெற - பெறும்படியாக
நில் - நில், நடந்துகொள்

பொருளுரை:

பெருமை சேரும்படியாக நடந்துகொள்.

 

புகழ்ந்தாரைப் போற்றிவாழ்

புகழ்ந்தாரைப் போற்றிவாழ்

பதவுரை:

புகழ்ந்தாரை - (உங்களை) நம்பி, சார்ந்து வாழ்வோரை
போற்றி - காப்பாற்றி
வாழ் - வாழ்

பொருளுரை:

உங்களை நம்பி, சார்ந்து வாழ்வோரை கைவிடாமல் காப்பாற்றி வாழ்

 

பூமி திருத்தியுண்

பூமி திருத்தி உண்

பதவுரை:

பூமி - நிலத்தை
திருத்தி - சீர்திருத்தி பயிர் செய்து
உண் - உணவு உண்

பொருளுரை:

நிலத்தைச் சீர்திருத்திப் பயிர் செய்து உண்

 

பெரியாரைத் துணைக்கொள்

பெரியாரைத் துணைக்கொள்

பதவுரை:

பெரியாரை - அறிவிலும், அனுபவத்திலும் சிறந்த பெரியோரை
துணைக்கொள் - துணையாகக் கொள்

பொருளுரை:

அறிவிலும், அனுபவத்திலும் சிறந்த பெரியோரை நாடிச் சேர்ந்து துணையாகக் கொள்.

 

பேதைமை யகற்று

பேதைமை அகற்று

பதவுரை:

பேதைமை - அறியாமையை
அகற்று - அகற்று, நீக்கு

பொருளுரை:

அறியாமையை நீக்கு.

 

பையலோ டிணங்கேல்

பையலோடு இணங்கேல்

பதவுரை:

பையலோடு - முதிர்ச்சியற்ற சிறுவர்களோடு
இணங்கேல் - இணங்காதே, கூடாதே

பொருளுரை:

முதிர்ச்சியற்ற சிறுவர்களோடு கூடித் திரியாதே. உன் அறிவிற்குத் தக்கவர்களோடு கூடு.

 

பொருடனைப் போற்றிவாழ்

பொருள்தனை போற்றி வாழ்

பதவுரை:

பொருள்தனை - ஈட்டும் பொருளை
போற்றி - மதித்து, பாதுகாத்து
வாழ் - வாழ்

பொருளுரை:

நீ ஈட்டும் பொருளைப் போற்றிப் பாதுகாத்து வாழ். வீணாகச் செலவு செய்து அழிக்காதே.

 

போர்த்தொழில் புரியேல்

போர்த்தொழில் புரியேல்

பதவுரை:

போர்த்தொழில் - போரில் புரிவதை
புரியேல் - செய்யாதே

பொருளுரை:

போர் புரிவதில் விருப்பம் கொள்ளாதே; அமைதியை நிலவச் செய்.

 
மகர வருக்கம்

னந்தடு மாறேல்

மனம் தடுமாறேல்

பதவுரை:

மனம் - உள்ளம்

தடுமாறேல் - தடுமாறாதே

பொருளுரை:

மனம் தடுமாறாதே; உறுதியுடன் இரு.

 

மாற்றானுக் கிடங்கொடேல்

மாற்றானுக்கு இடம் கொடேல்

பதவுரை:

மாற்றானுக்கு - பகைவனுக்கு
இடம் கொடேல் - இடம் கொடுக்காதே

பொருளுரை:

பகைவனுக்கு வாய்ப்பு கொடுக்காமல் எச்சரிக்கையாக இரு.

 

மிகைபடச் சொல்லேல்

மிகைபடச் சொல்லேல்

பதவுரை:

மிகைபட - மிகுதியாக, மிகைப்படுத்தி
சொல்லேல் - பேசாதே

பொருளுரை:

மிகுதியாகப் பேசாதே; சுருங்கச் சொல்.

மிகைப்படுத்திப் பேசாதே.

 

மீதூண் விரும்பேல்

மீது ஊண் விரும்பேல்

பதவுரை:

மீது - மிகுதியாக
ஊண் - உண்பதை
விரும்பேல் - விரும்பாதே

பொருளுரை:

மிகுதியாக உணவு உண்ண விருப்பம் கொள்ளாதே.

 

முனைமுகத்து நில்லேல்

முனைமுகத்து நில்லேல்

பதவுரை:

முனைமுகத்து - போர்முனையில்
நில்லேல் - நிற்காதே

பொருளுரை:

அமைதி வழியை ஆராயாமல் எப்போதும் போர்முனையில் நிற்காதே.

 

மூர்க்கரோ டிணங்கேல்

மூர்க்கரோடு இணங்கேல்

பதவுரை:

மூர்க்கரோடு - மூடத்தனம் கூடிய முரட்டுத்தனம் மிக்கவரோடு
இணங்கேல் - இணங்காதே, பழகாதே

பொருளுரை:

மூடத்தனம் கூடிய முரட்டுத்தனம் மிக்கவரோடு பழகாதே.

 

மெல்லினல்லாள் தோள்சேர்

மெல் இல் நல்லாள் தோள் சேர்

பதவுரை:

மெல் - மெல்லிய (மனம் கொண்ட)
இல் - இல்லாள் எனுன் மனைவி
நல்லாள் - நற்குணம் நிறைந்தவள்
தோள் - தோள்களை
சேர் - சேர்ந்துகொள்

பொருளுரை:

நற்குணம் நிறைந்த உன் மனைவியுடன் சேர்ந்து வாழ்; பிற மாதரை நினைக்காதே.

 

மேன்மக்கள் சொற்கேள்

மேன்மக்கள் சொல் கேள்

பதவுரை:

மேன்மக்கள் - உயர்ந்தவர்களின்
சொல் - சொற்களை
கேள் - கேட்டு பின்பற்று

பொருளுரை:

உயர்ந்த குணம் கொண்ட பெரியவர்களின் சொற்களைக் கேட்டு பின்பற்று.

 

மைவிழியார் மனையகல்

மைவிழியார் மனை அகல்

பதவுரை:

மைவிழியார் - மை தீட்டிய விழிகள் கொண்ட பரத்தையர்
மனை - வீடு
அகல் - அகன்று போ, விலகு

பொருளுரை:

பரத்தையர் மனையைச் சேராமல் விலகு.

 

மொழிவ தறமொழி

மொழிவது அற மொழி

பதவுரை:

மொழிவது - சொல்வதை
அற - (ஐயம்) நீங்க
மொழி - சொல்

பொருளுரை:

சொல்லுவதை ஐயம் எழாதவாறு திருத்தமுடன் சொல்.

 

மோகத்தை முனி

மோகத்தை முனி

பதவுரை:

மோகத்தை - நிலையில்லாத சிற்றின்ப ஆசையை
முனி - வெறுத்து ஒதுக்கு (முனிதல் - வெறுத்தல்)

பொருளுரை:

நிலையில்லாத சிற்றின்பத்தின் மீதான ஆசையை வெறுத்து ஒதுக்கு

 
வகர வருக்கம்

ல்லமை பேசேல்

வல்லமை பேசேல்

பதவுரை:

வல்லமை - உனது வலிமையை
பேசேல் - பேசாதே

பொருளுரை:

உனது வலிமையை நீயே புகழ்ந்து பேசாதே.

 

வாதுமுற் கூறேல்

வாது முன் கூறேல்

பதவுரை:

வாது - வாதம், தர்க்கம்
முன் - (பெரியோர்) முன்னே
கூறேல் - பேசாதே

பொருளுரை:

பெரியோர்கள் முன் வீண் வாதம் பேசாத.

 

வித்தை விரும்பு

வித்தை விரும்பு

பதவுரை:

வித்தை - கல்வி, திறமை, அறிவு
விரும்பு - விரும்பு

பொருளுரை:

எப்போதும் திறமையை வளர்த்துக்கொள்ள விரும்பு.

எப்போதும் நுட்பங்களைக் கற்றுக்கொள்ள விரும்பு.

 

வீடு பெறநில்

வீடு பெற நில்

பதவுரை:

வீடு - மறுபிறவி இல்லாத வீடுபேறு (மோட்சம், முக்தி)
பெற - அடையும்படி
நில் - (அதற்குரிய ஞானவழியிலே) நில்

பொருளுரை:

வீடுபேறு அடையும்படியான உயர்ந்த நல்வழியில் நில்.

 

வுத்தம னாயிரு

உத்தமனாய் இரு

பதவுரை:

உத்தமனாய் - உயர்குணமுடையவனாய்
இரு - இருப்பாயாக

பொருளுரை:

நற்குணங்கள் நிறைந்தவனாய் இரு.

 

வூருடன் கூடிவாழ்

ஊருடன் கூடிவாழ்

பதவுரை:

ஊருடன் - ஊர் மக்களுடன்
கூடி - ஒன்றுபட்டு
வாழ் - வாழ்க

பொருளுரை:

ஊர் மக்களுடன் ஒன்றுபட்டு கூடி வாழ்.

 

வெட்டெனப் பேசேல்

வெட்டு என பேசேல்

பதவுரை:

வெட்டு என - சொற்களால் வெட்டும்படியாக கடினமாக
பேசேல் - பேசாதே

பொருளுரை:

யாருடனும் வெட்டும்படியான கடின சொற்களால் பேசாதே.

 

வேண்டி வினைசெயேல்

வேண்டி வினைசெயேல்

பதவுரை:

வேண்டி - வேண்டுமென்றே விரும்பி
வினை - செயல் (தீய செயல்களை)
செயேல் - செய்யாதே

பொருளுரை:

வேண்டுமென்றே தீய செயல்களைச் செய்யாதே.

 

வைகறைத் துயிலெழு

வைகறை துயில் எழு

பதவுரை:

வைகறை - அதிகாலையில்
துயில் - தூக்கம்/ நித்திரை விட்டு
எழு - எழுந்திரு

பொருளுரை:

அதிகாலையில் தூக்கம் விட்டு எழு.

 

வொன்னாரைத் தேறேல்

ஒன்னாரைத் தேறேல்

பதவுரை:

ஒன்னாரை - பகைவர்களை
தேறேல் - நம்பாதே

பொருளுரை:

பகைவர்களை நம்பாதே

 

வோரஞ் சொல்லேல்

ஓரம் சொல்லேல்

பதவுரை:

ஓரம் - ஒரு சார்பாக
சொல்லேல் - பேசாதே

பொருளுரை:

ஒரு சார்பாக பேசாதே; நடுநிலை தவறாதே.

 
 
துரிதத் தேடல்